- Advertisement -
- Advertisement -

கடனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இருப்பினும் கடனை வாங்காமல் வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு பல வழிமுறைகளை பின்பற்றினாலும் தெய்வ அருளால் தான் நம்முடைய கடன் பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதால் தெய்வ வழிபாட்டிலும் நாம் ஈடுபட வேண்டும். நம்முடைய முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவாவது தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு பிறகு அந்த முயற்சிகளை செய்யும் பட்சத்தில் நம்முடைய கடன் பிரச்சனையும் தீரும். அப்படி தெய்வத்தை நம்பி செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எவ்வளவு பெரிய கடனும் காணாமல் போக

ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் வளர்பிறை என்றும் 15 நாட்கள் தேய்பிறை என்றும் கூறுவது உண்டு. அதே போல் பௌர்ணமி, அமாவாசை போன்ற சிறப்பு மிகுந்த நாட்களில் பல பரிகாரங்களையும் செய்வது உண்டு. ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஒவ்வொரு நாளை தேர்வு செய்து செய்தால்தான் அந்த வேண்டுதல் நிறைவேறும். அந்த வகையில் அமாவாசை கழித்து வரக்கூடிய முதல் சனிக்கிழமை அன்று நாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அவை தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் அமாவாசை என்பது பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வருகிறது. அதற்கு அடுத்தார் போல் வரக்கூடிய சனிக்கிழமை என்பது மார்ச் ஒன்றாம் தேதி. அன்று மூன்றாம் பிறையும் கூட. அன்றைய நாளில் நாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது நம்முடைய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அன்றைய தினத்தில் காலையிலேயே அருகில் எந்த கோவிலில் அரசமரம் இருக்கிறதோ அந்த இடத்தில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு மூன்று கொப்பரை தேங்காய் வேண்டும். அது முழு தேங்காயாக இருக்க வேண்டும். அதேபோல் முழு கோதுமையாக 100 கிராமும், சர்க்கரை 100 கிராம், எள் 100 கிராமும் வாங்கிக் கொள்ளுங்கள். இவை மூன்றையும் நன்றாக கலந்து ஒவ்வொரு கொப்பரை தேங்காய்விற்குள்ளும் போட்டு நிரப்பி விட வேண்டும். இப்பொழுது இந்த மூன்று கொப்பரை தேங்காயையும் எடுத்துக்கொண்டு அரசமரம் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று அரச மரத்தின் அடியில் இந்த கொப்பரை தேங்காய்களை புதைக்கும் வண்ணம் நன்றாக மண்ணைத் தோண்டி உள்ளே வைத்து மூடிவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு நாம் எந்த இடத்தில் கொப்பரை தேங்காயை வைத்தோமோ, அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி கடன் பிரச்சனை முற்றிலும் தீர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொண்டு அந்த கொப்பரை தேங்காயை புதைத்த இடத்தை தொட்டு மனதார வணங்க வேண்டும். பிறகு அந்த அரச மரத்தை 14 முறை வலம் வந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக மூன்று சனிக்கிழமைகள் நாம் செய்யும்பொழுது அரச மரத்தில் குடியிருக்க கூடிய மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெற்று கடன் பிரச்சினை தீர்வதற்குரிய பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:சுக்கிர ஹோரை சுக்கிர வழிபாடு

அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் சனிக்கிழமை அன்று இந்த முறையில் நாம் பரிகாரம் செய்வதன் மூலம் மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெறுவோம் அதன் மூலம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதனால் கடன் பிரச்சனையும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -