- Advertisement -
- Advertisement -

இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பணக்கார கடவுள் யார் என்று கேட்டால், உடனே சொல்லி விடுவார்கள். திருப்பதி ஏழுமலையான் தான் என்று. பணம் வந்து கொட்டக்கூடிய இந்த ஏழுமலையான் கோவிலுக்கு மூலவராக இருக்கக் கூடிய, பாலாஜிக்கு இன்று பிறந்தநாள். இன்றைய தினத்தை பாலாஜி ஜெயந்தி என்று சொல்லுவார்கள். இன்று திருப்பதியில் பெருமாளுக்கு கோலாகலமாக விசேஷ பூஜைகள் நடைபெறும்.

திருப்பதிக்கு சென்றால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று சொல்லுவார்கள். அதே போல தான் திருப்பதி பாலாஜியின் பிறந்தநாள் அன்று அந்த பெருமாளை மனதார நினைத்து நம்முடைய வீட்டில் இருந்தே வணங்கி வழிபாடு செய்தாலும், நம் வாழ்வில் திருப்பம் வரும். உங்கள் வாழ்வில் இருக்கும் தீரா துன்பங்கள் தீர இன்றைய தினம் பெருமாளை வீட்டில் இருந்தபடியே எப்படி வழிபாடு செய்வது, ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பாலாஜி ஜெயந்தி 2024

மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் தான் திருப்பதி பாலாஜி பெருமாள் அவதரித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இன்று 23-12 -2024 திங்கட்கிழமை அன்று பாலாஜி ஜெயந்தி. இன்று மாலை உங்கள் வீட்டு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று 2 நெய் தீபங்கள் ஏற்றி பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் துளசி இலைகளை வாங்கி கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து வாருங்கள். பெருமாளை முடிந்தால் 27 முறை வலம் வரலாம். வலம் வந்து ‘ஓம் நமோ நாராயணா’ மந்திரத்தை சொல்லி என்ன வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும்.

இன்று திருப்பதியில் பிரத்தியேகமாக பெருமாளை தரிசனம் செய்து அங்கபிரதட்சணம் செய்தால் நம் மனதில் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆனால் நாம் எல்லோராலும் அந்த வழிபாட்டை செய்ய முடியாது. திருப்பதிக்கு இன்றைய சூழ்நிலையில் சென்று பெருமாள் தரிசனம் செய்வது என்பது ரொம்பவும் கடினமான காரியம் ஆகிவிட்டது.

- Advertisement -

கூட்ட நெரிசலில் சிக்கி அவரை காண்பதற்குள் இந்த யுகமே முடிந்துவிடும் போல. அவ்வளவு போராட்டம். சரி இருக்கட்டும். நம் வீட்டிலும் திருப்பதி பாலாஜி பெருமாள் இருக்கிறார் அல்லவா. அவர் முன்பாக இரண்டு தீபங்களை ஏற்றி வையுங்கள். அவருக்கு பிடித்த துளசி தீர்த்தத்தை, அவர் முன்பாக வைக்க வேண்டும். துளசி தீர்த்தத்தில் கொஞ்சமாக பச்சை கற்பூரம் போடவும்.

பச்சை கற்பூரத்தை கொஞ்சமாக எடுத்து பெருமாளுடைய நெற்றிலும், தாடை பகுதியில் பூசி விடுங்கள். பிறகு பெருமாளுக்கு மஞ்சள் நிற பூக்களை சூட்டி இன்றைய தினம் வழிபாடு செய்தால் ரொம்ப ரொம்ப நல்லது. 2 சாமந்திப்பூ வைத்தாலும் சரிதான். ‘திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதங்கள் பணிவோம்’ என்ற மந்திர வார்த்தைகளை 27 முறை சொல்லி உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: துரோகிகள் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்க முருகன் வழிபாடு

அந்த திருப்பதிக்கு சென்று, திருமலையில் இருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும். இந்த மார்கழி மாதத்தில் இப்படிப்பட்ட அருமையான தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷத்துடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -