
இல்லத்தரசிகள் பெரிய பெரிய வேலையை கூட சுலபமாக செய்து முடிப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்ய சிலர் சிரமபடுவாங்க. அப்படி உங்களுக்கு சிரமம் தரக்கூடிய இரண்டு வேலையை எளிமையாக்க இந்த வீட்டு குறிப்பு.
உங்க வீட்டு பாத்ரூமில் இருக்கும் அழுக்கு படிந்த உப்பு கறை படிந்த, எவர்சில்வர் டேப்பை சுத்தம் செய்யவும், உங்க வீட்டில் இருக்கும் டேபிள் ஃபேனை கையே தொடாமல் சுத்தம் செய்யவும் எளிமையான ஒரு வீட்டு குறிப்பையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஒரு சின்ன பவுல் எடுத்துக்கோங்க. அதில் பல் தேய்க்கும் பேஸ்ட் 1 ஸ்பூன், பேக்கிங் சோடா 1 ஸ்பூன், புளிக்கரைசல் 1ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 1 ஸ்பூன், இந்த நான்கு பொருட்களையும் போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு திக்கான பேஸ்ட் உங்களுக்கு கிடைத்திருக்கும்.
அதை எவர்சில்வர் டேப்புக்கு மேலே நன்றாக தடவி விட்டு, 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பான்ச் நார் போட்டு தேய்த்து கழுவினாலே போதும் அந்த டேப்பில் இருக்கக்கூடிய அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும். உங்களுடைய வீட்டில் எவர் சில்வர் சிங்க் பயன்படுத்தினால் அதற்கு மேலேயும் இந்த லிக்விடை ஊற்றி 20 நிமிடங்கள் கழித்து லேசாக தேய்த்துக் கொடுத்தால் அந்த சிங் புதுசு போல மாறும் தேவைப்படுபவர்கள் ட்ரை பண்ணி பாருங்க.
சரி, டேபிள் ஃபேனுக்கு வருவோம். டேபிள் ஃபேனை துடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு சின்ன பவுல் எடுத்துக்கோங்க. அதில் தண்ணீர் 1/2 டம்ளர், வினிகர் 1/2 டம்ளர் பேக்கிங் சோடா 1 டேபிள்ஸ்பூன், போட்டு இதை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த ஸ்ப்ரேவை உங்களுடைய டேபிள் பேனுக்கு மேலே ஸ்பிரே செய்து விடுங்கள். டேபிள் ஃபேனில் காற்று வரக்கூடிய இடம் இருக்கும் அல்லவா.
அந்த வழியாக விசிறியின் மேல் படும்படி கூட இந்த ஸ்ப்ரேவை அடிக்கலாம். அப்படியே டேபிள் ஃபேனுக்கு முன்பக்கம் இருக்கும் கம்பி முழுவதும் இந்த ஸ்ப்ரே படும் அல்லவா. ஒரு இரண்டு நிமிடம் கழித்து இந்த டேபிள் பேன் கவர் ஆகும்படி, ஒரு பாலத்தின் கவரை எடுத்து அதன் மேலே போட்டு கட்டி விடவும். உங்களுடைய டேபிள் பேனை 1 என்ற பட்டனை அழுத்துங்கள்.
அதாவது மிதமான காற்று வரும்படி செய்யவும். இரண்டு நிமிடம் இந்த டேபிள் பேன் அப்படியே ஓடட்டும். சேனலில் இருக்கும் அழுக்கு எல்லாம் அந்த கவருக்குள்ளேயே நின்று விடும். பிறகு மேலே போட்டிருக்கும் கவலை எடுத்துப் பார்த்தால், டேபிள் ஃபேன் 75% சுத்தமாகி இருக்கும். பிறகு நீங்கள் ஒரு காய்ந்த துணியை வைத்து ஃபேனை துடைத்துக் கொள்ளவும்.
இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்ன என்றால், ஃபேனுக்கு மேலே ஸ்பிரே செய்யும் போது அந்த தண்ணீர் பேனுக்கு பின்னால் இருக்கும் மோட்டாரில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்பிரே செய்யும் போதும் ஃபிளக் ஸ்விட்ச் போர்டில் சொருகி இல்லாத படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: வீட்டிற்கு தேவையான எளிமையான குறிப்பு
இறுதியாக ஃபேன் சுற்றி முடித்தவுடன், பேனுக்கு மேலே இருக்கும் பாலத்தின் கவரை எடுக்கும் போதும் ஃபிளக்கை கரண்டில் இருந்து எடுத்து விடவும். உங்களுடைய வீட்டில் சிறு பிள்ளைகள் இல்லாத சமயத்தில் ஜாக்கிரதியாக இந்த முறையில் டேபிள் ஃபேனை சுத்தம் செய்து பயன்பெறுங்கள். இல்லத்தரசிகளுக்கு இந்த இரண்டு வீட்டு குறிப்புகளும் நிச்சயம் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.