- Advertisement -
மந்திரம்

தொழிலில் வெற்றியடைய மந்திரம்

- Advertisement -

ஒவ்வொருவரும் ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போது அதை நல்ல முறையில் துவங்கி அதில் லாபம் அனுபவித்து பெரிய நிலைக்கு வர வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அப்படி துவங்கும் அனைவராலும் தொழிலில் முன்னுக்கு வர முடிகிறதா? என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான் அது எப்படி சிலரால் மட்டும் வர முடிகிறது நம்மால் ஏன் முடியவில்லை என்று கேள்வியும் நம் மனதில் தோன்றும்.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் செய்யும் தொழில் முதலில் நமக்கு நல்ல அனுபவம் இருக்க வேண்டும். அந்தத் தொழிலில் நம்முடைய முழு உழைப்பையும் முயற்சியும் நம்பிக்கையும் செலுத்த வேண்டும். அப்படி தொழிலில் ஈடுபடும் அனைவருக்கும்… எடுத்த காரியம் வெற்றியில் முடிவடைய பல பரிகாரங்கள், முயற்சிகள் மற்றும் பல உள்ளன அதில் மிகவும் எளிமையான ஒன்றான வெற்றி காணும், நம்பிக்கையான மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் பற்றிய தொகுப்பில் இன்று பார்க்க உள்ளோம்.

- Advertisement -

தொழிலில் முன்னேற மந்திரம்

நாம் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேற இந்த ஒரு மந்திரம் உறுதுணையாக இருக்கும் சொல்லப்படுகிறது. அப்படியான மிக உயர்ந்த மற்றும் சக்தியான சுதர்சன மந்திரம் என்ற அஷ்டக ஸ்தோத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த மந்திரத்தை பற்றியும் இதன் முக்கியத்துவம் மற்றும் வெற்றிகள் குவிக்க இந்த மந்திரம் எவ்வாறெல்லாம் உதவி செய்கிறது என்று பார்க்க உள்ளோம்.

ஒரு காரியம் அல்லது செயல் என்று எடுத்துக் கொண்டால் வெற்றி தோல்வி இன்பம் துன்பம் என்று பல இருக்கும். அதில் வெற்றிகளை குவிக்கவும் தடைகளை தாண்டி வரவும் அந்த தடையை எதிர் கொள்ளவும் தேவையான அனைத்து சக்தியையும் தருவது சுதர்சனம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த சுதர்சன சக்கரம் கிருஷ்ணரின் கையில் இருக்கும் என்பது நமக்கெல்லம் தெரிந்தது தான். சுதர்சனம் என்பதை சுத ஆத்திரசனம் என்பர். சுத என்றால் நல்லது ஆத்திரசனம் என்றால் ஈர்ப்பு. சக்கர வடிவம் கொண்ட இது வாழ்வில் நாம் எடுக்கும் காரியங்களில் வெற்றி காணவும் அதற்கான மன உறுதி மற்றும் வலிமையைத் தருவார் என்று இன்றும் பலரால் நம்ப பாடுகிறது.

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சன, ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சன!!!!!!!
என்ற அம்பாளின் மந்திரத்தை தினந்தோறும் காலையில் மன வலிமை மற்றும் உறுதியுடன் உச்சரித்து வருவதால் வாழ்வில் வரும் துன்பமான தோல்விகள் நீங்கி மனம் புத்துணர்ச்சி உடன் வெற்றியை அடையும் என்று சொல்லப்படுகிறது. இதனைப் பலரும் உச்சரித்து மிகவும் நல்ல முறையில் வெற்றியை சந்தித்து உள்ளனர் என்று நம் முன்னோர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

உச்சரித்தால் மட்டும் வெற்றி நம்மளை தேடி வந்து விடாது இத்துடன் நமது விடா முயற்சி, தொடர்ச்சியான முயற்சி, தோற்க்க மாட்டோம் என்ற பிடிவாதம், தன்னம்பிக்கை, பலம், நம் தொழிலில் நம்முடன் சேர்ந்து இருப்பவர்கள் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை அனைத்தையும் அதிகரிக்கும் மந்திரமே இந்த சுதர்சன மந்திரம்.

எந்தவித முயற்சியும் போடாமல் வெறும் மந்திரத்தை மட்டும் உச்சரித்து வெற்றி வரவில்லை என்று குறை சொல்பவருக்கு இந்த மந்திரத்தின் பலன் மற்றும் சக்தியை உணர முடியாது.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக திருப்பதி தரிசனம்

ஆகையால் முயற்சியுடன் கூடிய உச்சரிப்பு மட்டுமே வெற்றி காண செய்யும். முழு மனதுடன் நம்பி கடவுளை நம்பினோர் கைவிட மாட்டார் என்று மனதார வேண்டி வாழ்வில் வெற்றியுடன் எல்லா நலமும் வளமும் பெற கடவுளை வேண்டுவோம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -