- Advertisement -
சமையல் குறிப்புகள்

வீட்டிலே சுலபமாக பட்டர் பன் செய்முறை

- Advertisement -

கோடை விடுமுறை வந்தாலே இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை குட்டீஸிற்கு ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான். இப்போது உள்ள குழந்தைகள் எல்லாம் ஏதோ ஒன்று செய்து வைத்தாலும் சாப்பிடுவது கிடையாது. அவர்களுக்கு பிடித்தது போல இருக்க வேண்டும். அதே நேரத்தில் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் இல்லத்தரசிகளுக்கு ஒரு அருமையான ஐடியா தான் இந்த பட்டர் பன். இந்த பட்டர் பன் பேக்கரியில் தான் கிடைக்கும் அதுவும் அது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும். நாம் வீட்டில் எளிமையாக இதே பட்டர் பன்ணை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது எப்படி என்று சமையல் குறிப்பு குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:

பன் – 4,
பட்டர் – 5 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
பால் – 1/4 கப்

செய்முறை:

இந்த பட்டர் பன் செய்ய டீக்கடையில் கிடைக்கும் பன் இருந்தாலே போதும் சூப்பராக செய்து விடலாம். இதற்கு டீ கடைகளில் கிடைக்கும் இந்த பன்ணை வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது இதை விட கொஞ்சம் பெரிதாக பேக்கரியில் பலன் கிடைக்கும். அது விலை குறைவாக தான் இருக்கும் அதை கூட வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பன்ணை கத்தி வைத்து இரண்டு பாதிகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதாவது இந்த பன்ணுக்குள் நாம் வெண்ணையை வைத்து மூட வேண்டும். அதற்கு ஏற்றார் போல் பன்ணை நீங்கள் நறுக்கிக் கொள்ள வேண்டும். நான்கு பன்ணையும் இதே போல நறுக்கி உள்ளே பட்டர் வைத்து மூடி வைத்து விடுங்கள்.

இப்போது தோசைக்கல் வைத்து சூடானவுடன் சிறிதளவு பட்டறை தோசை கல்லில் ஊற்றுங்கள். அதன் பிறகு நீங்கள் ஏற்கனவே நறுக்கி பட்டர் வைத்து தயாராக வைத்திருக்கும் பன்ணை அதன் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் இரண்டு புறமும் திருப்பி போடுங்கள் நன்றாக சிவந்து வந்து விடும். அதன் பிறகு அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து விட்டு பன் மீது பாலை ஊற்றுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த பன்னாது பால் பட்டர் இரண்டிலும் நன்றாக ஊறி மெருதுவாக மாறி விடும். அடுத்து அடுப்பில் இருந்து இந்த பன்ணை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து விடுங்கள். இப்போது மேலே கொஞ்சமாக சர்க்கரை தூவி விடுங்கள். இந்த சர்க்கரையின் அளவு உங்கள் இனிப்பிற்கு ஏற்ற போல் மாற்றிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான சைவ கோலா உருண்டை செய்முறை

இவையெல்லாம் செய்து முடித்த பிறகு கடைசியாக இந்த பன் மேலே கொஞ்சமாக பட்டறை தடவி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள். அருமையான சுவையில் சூப்பரான பட்டர் பன் வீட்டிலே தயார்.

- Advertisement -