
காய்கறிகளில் காலிஃப்ளவர் தான் 65 செய்யும் பொழுது அசத்தலான சுவையை கொடுக்கும். கறி சுவையை மிஞ்சக் கூடிய வகையில் இருக்கக் கூடிய இந்த காலிஃப்ளவர் 65 ரெசிபி செய்யும் பொழுது சில டிரிக்ஸ் அண்ட் டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொண்டால் மொறு மொறு என்று கிரிஸ்பியான செம டேஸ்ட்டில் ஒரு காலிஃப்ளவர் 65 ரெடி! இந்த அசத்தலான மொறு மொறு காலிஃப்ளவர் 65 செய்வது எப்படி? என்னும் சீக்ரெட்டை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
காலிஃப்ளவர் 65 செய்ய தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முழு காலிஃப்ளவரை கொதிக்கும் தண்ணீரில் துண்டு துண்டுகளாக சேர்த்து சிறிது நேரம் அப்படியே வையுங்கள். காலிஃப்ளவரில் நுண்ணிய புழுக்கள் இருக்கும் அவையெல்லாம் சுடு தண்ணீரில் வெளியேறிவிடும். பாதி அளவிற்கு வெந்ததும் தனியே எடுத்து வையுங்கள்.
பின்னர் ஒரு மிக்ஸிங் பவுலில் மிளகாய்த் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, நிறத்திற்கு காஷ்மீரி மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டு, ஒரு கொத்து கருவேப்பிலையை பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இவற்றை கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் எடுத்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து 10 லிருந்து 15 நிமிடம் அப்படியே ஊற விடுங்கள்.
அதன் பிறகு காலிஃப்ளவர் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் தண்ணீரில் மைதா மாவு மற்றும் கான்பிளவர் மாவு சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக பேக்கிங் சோடா சேர்த்து, வெதுவெதுப்பான எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்பு நீங்கள் தனியாக எடுத்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து இதனுள் டிப் செய்து சூடாக இருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டியது தான்.
இதையும் படிக்கலாமே:
தை வெள்ளி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
இதை ஒரு முறை பொறித்து எடுத்தாலே அவ்வளவு கிரிஸ்பியாக மொறு மொறுவென்று சூப்பராக இருக்கும். இதை இன்னும் டபுள் ஃப்ரை செய்தால் வேற லெவலில் இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. காலிஃப்ளவர் 65 செய்யும் பொழுது வெளியில் மொறு மொறு என்று, உள்ளே காலிஃப்ளவர் சாப்பிடுவதற்கு மிருதுவாகவும், சுவையுடனும் இருக்க வேண்டும். இந்த முறையில் நீங்கள் செய்யும் பொழுது பர்ஃபெக்ட்டான மெத்தடில் 65 உங்களுக்கு நிச்சயம் வரும். உங்கள் வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.