- Advertisement -
ஜோதிடம்

சந்திர கிரகண பாதிப்பு நீங்க பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் சந்திர கிரகணம் சூரிய கிரகணம் என்பது இயற்கையிலேயே நடக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. ஒரு சில நேரங்களில் அது நம் கண்களுக்கு தெரியும். ஒரு சில நேரங்களில் கண்களுக்கு தெரியாது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி புதன்கிழமை அன்று சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை சந்திர கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது. இதற்கு காரணம் அது பகல் நேரத்தில் நடை பெறுவது தான்.

அப்படி நம்மால் பார்க்க முடியாது என்பதால் சாதாரணமாக சந்திர கிரகணம் நடக்கும் பொழுது நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் ஒரு சில ராசி, நட்சத்திரகாரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் பாதிப்புகள் ஏற்படும். அந்த ராசி, நட்சத்திரக்காரர்கள் யார் என்றும் அவர்கள் என்ன பரிகாரம் செய்தால் அந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்றும் தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

சந்திர கிரகண பாதிப்பு நீங்க பரிகாரம்

சந்திர கிரகணம் நடைபெறும் நாளில் சந்திர கிரகணத்தால் பாதிக்கப்படக்கூடிய ராசிகளாக திகழக்கூடியவர்கள் தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம். இதே போல் பூரட்டாதி, புனர்பூசம், விசாக நட்சத்திரங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். இந்த நபர்கள் மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய பரிகாரத்தை பார்ப்போம்.

தனுசு ராசிக்காரர்கள் அன்றைய தினம் காலை ஆறு மணிக்கு மேல் வீட்டு பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபம் குறைந்தது 2 மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு மாலை ஆறு மணிக்கு மேல் அருகில் இருக்கக்கூடிய நவகிரக ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்க கூடிய புதன் பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

மகர ராசிக்காரர்கள் காலை 6 மணிக்கு பிறகு நெய் தீபம் ஏற்றி வைத்து இரண்டு மணி நேரம் எரிய விட வேண்டும். உணவு அருந்துவதற்கு முன்பாக எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் நவகிரக ஆலயத்தில் இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு வாசனை நிறைந்த மலர்களை சூட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

கும்ப ராசிக்காரர்கள் காலை 6 மணிக்கு மேல் நெய் தீபம் ஏற்று 2 மணி நேரம் எரிய விட வேண்டும். உணவு அருந்துவதற்கு முன்பாக நல்லெண்ணெய் சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டு செய்ய வேண்டும்.

- Advertisement -

மீன ராசிக்காரர்கள் காலை 6 மணிக்கு மேல் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மாலையில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் காலை 6 மணிக்கு மேல் நெய் தீபம் ஏற்றி இரண்டு மணி நேரம் எரிய விட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் பெருமாள் ஆலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்கள் காலை 6 மணிக்கு மேல் நெய் தீபம் ஏற்றி 2 மணி நேரம் எரிய விட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். விசாக நட்சத்திரக்காரர்கள் காலை ஆறு மணிக்கு மேல் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இரண்டு மணி நேரம் எரிய விட வேண்டும். கொண்டைக்கடலையை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் அம்மன ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:இன்றைய ராசிபலன் – 14 செப்டம்பர் 2024

இந்த எளிமையான பரிகாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் இந்த ராசி மற்றும் நட்சத்திரக்காரர்கள் செய்வதன் மூலம் சந்திர கிரகணத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -