- Advertisement -
சமையல் குறிப்புகள்

சப்பாத்தி டால் செய்வது எப்படி என்று பார்ப்போம்

பொதுவாக வடமாநில மக்கள் சப்பாத்தி அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு அவர்கள் சாப்பிடும்போது உட்கொள்ளவது சப்பாத்தி டால். இதனையே அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த சப்பாத்தி டால் நாம் நம் வீட்டில் படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

சப்பாத்தி டால் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

துவரம்பருப்பு – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
கடலை பருப்பு – 1கப்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 5 பல்
பச்சைமிளகாய் – 3
பெருங்காயத்தூள் – சிறிதளவு
வெங்காயம் – 1
தக்காளி -1
கரம் மசாலா – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

சப்பாத்தி டால் செய்முறை:

முதலில் 30 நிமிடம் ஊறவைத்த துவரம்பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் உப்பு போட்டு கழுவி அதனை ஒரு குக்கரில் வைத்து 3 விசில் வரை வேக விடவும். பிறகு ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி,பூண்டு மற்றும் பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும் .

- Advertisement -

பிறகு அதில் சிறிது பெருங்காயத்தூள் தூவி நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து கரம் மசாலா மற்றும் மிளகாய்த்தூள் போட்டு நன்றாக வதக்கவும்.

மசாலா நன்றாக கொதித்ததும் அதில் நாம் ஏற்கனவே வேகவைத்த பருப்பினை எடுத்து ஊற்றி மீண்டும் அதனை 8 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சப்பாத்தி டால் தயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
தக்காளி ரசம் செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Chappathi daal recipe in Tamil. It is also called as Chappathi daal seimurai or Chappathi daal seivathu eppadi in Tamil or Chappathi daal preparation in Tamil.

- Advertisement -