
வந்த வினை எல்லாம் தீருவதற்கு சதுர்த்தி விரதமும், நீண்டகால வேண்டுதலை பலிக்கச் செய்யும் கார்த்திகை விரதமும் ஒன்றாக வரும் வேளைலையில் இந்த இலையால் இருவருக்கும் அர்ச்சனை செய்ய, சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இவ்வருடம் நாளை ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சதுர்த்தி விரதம் மற்றும் கார்த்திகை விரதம் ஒன்றாக வருவதால் செய்ய வேண்டிய வழிபாடுகள் என்னென்ன? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
ஸ்ரீகுரோதி வருடம், பங்குனி மாதம், 18 ஆம் நாள் வரக்கூடிய இந்த சதுர்த்தி மற்றும் கார்த்திகை விரதம் நற்பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியது. வீடு கட்டும் யோகத்தை வழங்கக்கூடிய அற்புதமான நாளாக அன்றைய நாள் இருக்கக்கூடும். வீடு கட்டும் யோகம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. முருகனின் அருளும், செவ்வாய் பகவானின் அருளும் இருந்தால் ஒருவன் வீடு கட்ட துவக்கம் செய்கிறான். மனை வாங்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகிறான்.
குரு அருளும் ஒருவர் வீடு கட்டுவதற்கு நிச்சயம் தேவை. சதுர்த்தி மற்றும் கார்த்திகை கூடிய இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி குளித்து முடித்துவிட்டு நல்ல நேரத்தில் விநாயகர் மற்றும் முருகப்பெருமானுக்கு மகத்துவம் நிறைந்த இந்த இலைகளால் அர்ச்சனை செய்தால், வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும். நல்ல நேரம் காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும் உள்ளது. அதைத் தாண்டி பகல் 10:30 மணி முதல் 11:30 வரையிலும், இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும் பூஜை செய்ய உகந்தது ஆகும்.
முருகன் மற்றும் விநாயகர் படங்களை வைத்து அலங்கரித்து பூஜைக்குரிய எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்யுங்கள். நைவேத்தியம் படைக்க சர்க்கரை பொங்கல், பானகம், கற்கண்டு, துளசி தீர்த்தம் போன்றவற்றை வைக்கலாம். விநாயகருக்கு மோதகமும் செய்து படைக்கலாம். பழங்களில் மாம்பழம், திராட்சை, வாழை போன்றவற்றை வைத்து நிறைவு செய்யுங்கள்.
விரதம் இருந்து இந்த நாளில் விநாயகர் மற்றும் முருகனுக்கு உகந்த ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், கதைகள், போற்றிகள் போன்றவற்றை உச்சரிக்கலாம். பின்னர் முக்கியமான ஒரு பொருள் கருந்துளசி! கருந்துளசியால் கார்த்திகை மற்றும் சதுர்த்தியில் விநாயகர் மற்றும் முருகனுக்கு முறையே 108 முறை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் சீக்கிரமே வீடு கட்டும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.
இதையும் படிக்கலாமே:
கோவில் புளியோதரை
நல்லெண்ணெய் தீபம் போட்டு கருந்துளசியால் 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகர் மந்திரங்கள் மற்றும் முருகனுக்கு உகந்த மந்திரங்களை உச்சரித்து இருவரையும் ஒருசேர வழிபட வேண்டும். பின்னர் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு அல்லது முருகன் கோவிலுக்கு சென்று மாலை வேளையில் அவர்களை தரிசனம் செய்யலாம். சக்தி வாய்ந்த மூலிகையாக இருக்கும் இந்த கருந்துளசியால் அர்ச்சனை செய்தால் எப்பேர்பட்ட வேண்டுதலும் பலிக்கும். ரொம்ப காலமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உங்களுடைய வீடு கட்டும் ஆசை நிறைவேறுவதற்கு நல்ல வாய்ப்பு இது பயன்படுத்த தவறாதீர்கள். வீடு கட்டுவது என்பது எல்லோருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். இந்த நாளில் உங்கள் வேண்டுதலை வைத்தால் நிச்சயம் அந்த கனவானது பலிப்பதற்குரிய எல்லா வழிகளும் உண்டு.