- Advertisement -
வீட்டு குறிப்புகள்

வீடு முழுவதும் கரப்பான் பூச்சி தொல்லையா? உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கரப்பான் பூச்சி ஸ்பிரேவை இப்படி தயாரித்து விரட்டுங்கள்.

பெரும்பாலும் வீடுகளில் கரப்பான் பூச்சியின் தொல்லை அதிகமாக தான் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் வீட்டைத் தூய்மை இல்லாமல் வைத்திருப்பதேயாகும். குப்பைகள் அதிகம் சேரும் இடங்களிலும், நீர் தேங்கும் இடங்களிலும் கரப்பான் பூச்சிகள் அதிகமாக வரும். சில சமயங்களில் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் கூட பாத்திரம் துலக்கும் ஸிங்கின் அடியில் இருந்து கரப்பான் பூச்சிகள் வரத்தான் செய்யும். கரப்பான் பூச்சிகள் அதிகம் சமையல் அறையில் தான் உளவிக் கொண்டிருக்கும். இது நமது உடலுக்கு மிகவும் தீமையை விளைவிக்கும். இந்த கரப்பான் பூச்சியை எந்த ஒரு செலவும் இல்லாமல் எப்படி விரட்டலாம் என்பதை பற்றியே இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

குறிப்பு 1:
முதலில் ஒரு கிண்ணத்தில் டீ, காபி போடுவதற்கு பயன்படுத்தும் சர்க்கரையை 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பை 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவேண்டும். இவற்றை ஒன்றாக கலந்து பின்பு அதனை கரப்பான் பூச்சி வரும் இடங்களில் கொஞ்சமாக தூவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கரப்பான்பூச்சி சக்கரையின் சுவைக்கு ஈர்க்கப்பட்டு அதனை சாப்பிடும் பொழுது சோடா உப்பின் தாக்கத்தினால் இறந்துவிடும்.

- Advertisement -

குறிப்பு 2:
பொதுவாக வேப்ப எண்ணெய்க்கு பூச்சிகளை கொல்லும் ஆற்றல் உண்டு. ஆகையால் கரப்பான் பூச்சி அதிகம் திரியும் இடங்களில் வேப்ப எண்ணெயை தெளித்து விடுவதன் மூலம் அவற்றை அழிக்கலாம். வேப்பை எண்ணெய் இல்லை என்றால் வேப்ப இலை பவுடரில் சிறிதாவது தண்ணீர் கலந்தும் தெளித்து விடலாம். இவற்றை இரவு மற்றும் காலை என்ன இருவேளையும் தெளிக்க வேண்டும்.

குறிப்பு 3:
ஒரு சிறிய கிண்ணத்தில் வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் சாம்பிராணி இரண்டை எடுத்து அதனை தூளாக்கி போட்டுக்கொள்ள வேண்டும். அதனுடன் தலை குளிக்கப் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு ஷாம்புவை சேர்த்துக்கொள்ளவேண்டும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூன்றையும் கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு லிக்விட் போன்று மாறிவிடும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக் கொண்டு வீட்டில் கரப்பான் பூச்சி வரும் மூலைகளில் எல்லாம் தெளித்து விட்டால் கரப்பான் பூச்சிகள் இறந்து விடும்.

- Advertisement -

குறிப்பு 4:
ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு தலைக்கு குளிக்கும் ஷாம்பூ, சிறிதளவு வினிகர், அதனுடன் சோடா உப்பு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதனை அப்படியே வைத்துவிட வேண்டும். கரப்பான் பூச்சிகள் இதனை சுவைக்க வரும்பொழுது இதில் கலந்துள்ள பொருட்களின் வேதி வினையினால் அவை இறந்துவிடும்.

குறிப்பு 5:
கரப்பான் பூச்சிகளை கொல்ல வேண்டாம், விரட்டினால் மட்டும் போதும் என்று நினைப்பவர்கள் அதை பிரிஞ்சி இலைகளை கொண்டு விரட்டலாம். கரப்பான் பூச்சி அதிகம் உள்ள இடங்களில் பிரிஞ்சி இலைகளை தூளாக்கி தூவி விட வேண்டும் அல்லது பிரிஞ்சி இலைகளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு அந்த நீரை கரப்பான் பூச்சி உள்ள இடங்களில் தெளிக்க வேண்டும். பிரிஞ்சி இலை வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு அலர்ஜி என்பதால் அவை அந்த வாசனை இருக்கும் இடத்தை அண்டாது.

குறிப்பு 6:
கொஞ்சம் தூளாக்கப்பட்ட வெள்ளம் அதனுடன் சிறிதளவு தண்ணீர் அதனுடன், ஒரு ஸ்பூன் வினிகர், சிறிதளவு சோடா உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாய்ப்புறம் சிறிய ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொண்டு அதன் விளிம்பில் இந்த வெள்ளைக்கரைசலை தடவி விட வேண்டும். இவ்வாறு தடவிய பாட்டிலை கரப்பான்பூச்சி வரும் இடங்களில் சுவரில் சாயும் படி நேராக வைத்து விட வேண்டும். வெள்ளத்தினை ருசிக்க வரும் பூச்சிகள் இந்த பாட்டலினுள் நுழைந்துவிடும். இந்த வெள்ள கரைசலை கரப்பான்பூச்சி ருசிக்கும் போது அவை மயங்கிய நிலைக்கோ அல்லது இறந்த நிலைக்கோ சென்று விடும். பின்னர் அவற்றால் வெளியே வர இயலாது. அதன் பிறகு அந்த பாட்டிலை வெளியில் எடுத்துச் சென்று தூரமாக போட்டுவிடலாம்.

இப்படி உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த முடியும். இனிமேல் பணம் செலவு செய்து இதற்கு என்று ஸ்பிரே எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -