- Advertisement -
சமையல் குறிப்புகள்

பால் பாயாசம் செய்து அதனை இப்படி மட்டும் பரிமாறிக் கொடுத்துப் பாருங்கள் இந்த வெயிலுக்கு குளுகுளுவென இருக்கும்

- Advertisement -

சித்திரை மாதம் துவங்கிய உடன் வெயில் மண்டையை பிளக்க ஆரம்பிக்கும். அவ்வாறு இந்த வருடம் அடிக்கின்ற வெயில் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. எனவே அனைவரும் சர்பத், ஜூஸ் இதுபோன்ற சில்லென்று இருக்கும் குளிர்பானங்களை குடிக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் பலர் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய குளிர்பானங்களை அதிகமாக வாங்கி குடிக்கின்றனர். இவ்வாறு பெரியவர்கள் செய்யும் அதே விஷயத்தை எல்லாம் குழந்தைகளும் செய்ய துவங்கி விடுகிறார்கள். அவர்களும் தங்களுக்கு குளிர்பானம் வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இவ்வாறு குழந்தைகள் அடம் பிடிப்பதற்கு ஏற்றார்போல் பெரியவர்களும் அதனை வாங்கிக் கொடுக்க தான் செய்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி தொல்லை, வயிற்றுப் பிரச்சனை வர ஆரம்பிக்கும். எனவே குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பும் பொழுது இப்படி சுவையான பால் பாயாசத்தை செய்து, அதனை சில்லென்று கொடுக்கும் பொழுது அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த பால் பாயாசத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பால் – ஒரு லிட்டர், சேமியா – 250 கிராம், ஜவ்வரிசி – 100 கிராம், சர்க்கரை – அரை கிலோ, முந்திரி பருப்பு – 50 கிராம், திராட்சை – 25 கிராம், நெய் – 3 ஸ்பூன், ஏலக்காய் – 10.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பேனை அடுப்பின் மீது வைத்து, அதில் மூன்று ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பிறகு இதில் 50 கிராம் முந்திரிப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் 25 கிராம் திராட்சை சேர்த்து வறுத்து வைக்க வேண்டும். பிறகு மீதமிருக்கும் நெய்யுடன் 250 கிராம் சேமியாவை சேர்த்து லேசாக வறுத்தெடுக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 3 அல்லது 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பின் மீது வைத்து கொதிக்க விடவேண்டும். சிறிது நேரத்தில் ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் அதனுடன் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

ஜவ்வரிசி, சேமியா இரண்டும் நன்றாக வெந்ததும், பத்து ஏலக்காயை மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடியாக அரைத்துக் கொண்டு, இந்த ஏலக்காய் தூளை கொதிக்கின்ற பாயசத்துடன் சேர்த்து கலந்து விடவேண்டும். பிறகு இதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை இவற்றையும் சேர்த்துக் கலந்து விட வேண்டும்.

பின்னர் பாயாசத்திற்கு தேவையான சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு ஒரு லிட்டர் பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதனை நன்றாக காய்ச்சி இந்த பாயசத்துடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு பாயாசம் நன்றாக ஆறியவுடன் அதனை ஒரு மணி நேரத்திற்கு பிரிட்ஜில் வைத்து, அதன் பிறகு அனைவருக்கும் பரிமாறி கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும்.

- Advertisement -