- Advertisement -
- Advertisement -

நம் மென்மையான பாதங்களில் கோடு விழுந்தது போல ஆங்காங்கே வெடிப்புகள் தோன்ற ஆரம்பிப்பதை (cracked heels) என்கிறோம். இது பொதுவாக பாதங்களின் விரல்களுக்கு பின்புறத்தில் மற்றும் பின்னக பாதங்களில் அதிகமாக காணப்படுகிறது. சிலருக்கு பாதம் முழுவதும் கூட இருப்பது உண்டு. இந்த பாத வெடிப்பு எதனால் உண்டாகிறது? அதற்கு தீர்வு தரும் 6 வழிமுறைகள் என்னென்ன? என்னும் அழகு குறிப்பு சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் பகிர்கிறோம்.

பாத வெடிப்பு (Cracked heels) என்பது பொதுவாக காயம் ஏற்படுவதாலும், வறண்டு உலர்ச்சி அடைவதாலும், சரியான பராமரிப்பு இல்லாமையும் ஒரு காரணமாக ஏற்படுகிறது. அதிகப்படியான எடையை பாதங்கள் தாங்குவதால் வெடிப்புகள் உண்டாகும். நீண்ட தூரம் பாதங்களில் உராய்வு ஏற்படும்படி நடப்பதாலும் இந்த வெடிப்புகள் உண்டாகிறது. சில தோல் பிரச்சனைகளும், உடல் நல பிரச்சனைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். பாத வெடிப்பு மறைய சில பயனுள்ள டிப்ஸ் உங்களுக்காக இதோ:

- Advertisement -

1. கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் சோப்பும், வெந்நீரும் பயன்படுத்தி கழுவி, உலர்த்தி வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். 10 – 15 நிமிடங்கள் வரை வெளியில் சென்று வந்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பை சேர்த்து கால்களை அதில் ஊற வையுங்கள். அதன் பிறகு சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள்.

2. மாய்ஸ்ரைசர்
மாய்ஸ்ரைசர்க்ரீம் அல்லது வேசலின், தேங்காய் எண்ணெய், ஷீ பட்டர், கிளிசரின், ஆமணக்கு எண்ணெய் போன்றவை தடவி கால்களை மென்மையாக உலர்வாக பராமரிக்க வேண்டும்.

- Advertisement -

3. பிறகு Foot scrubber அல்லது பியூமிக் கல்லை (pumice stone) பயன்படுத்தி மேல் தோலை அகற்றலாம்.

4. முடிந்தால் பாதங்களில் சாக்ஸ் போடுவதை பழக்கப்படுத்துங்கள். இரவில் க்ரீம் தடவிய பிறகு கால் சாக்ஸ் போடுவது நல்லது. இது ஈரப்பதத்தை பூட்டி வைத்து கால்களை மென்மையாக வைத்திருக்க உதவும்.

- Advertisement -

5. நீர் குடிக்க மறக்காதே
உடலுக்குள் நீர் சத்து போதுமானதாக இருந்தால் தோல் சீராக இருக்கும். நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதை குறைத்தால் தோல் பிரச்சினைகள் வரக்கூடும்.

6. சரியான காலணி
சரியான காலணிகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்கும் காலணிகளும் பாத வெடிப்புக்கு காரணமாக அமையும். அதிக அழுத்தம் தராத மென்மையான பாத தளங்கள் கொண்ட செருப்புகள் பயன்படுத்த வேண்டும். கால்களை கட்டுக்குள்ளாக பிடிக்கும் செருப்புகளை தவிர்க்கவும். கால்களுக்கு காற்றோட்டம் உள்ள செருப்புகளை அணியவும்.

இயற்கை ஹோம்ரெமடீஸ்: கடலை மாவு + தேன் + பசும்பால்: இந்த கலவையை தடவினால் பாதங்கள் மென்மையாகும். அலோவேரா ஜெல்: இயற்கையாக தோலை ஆற்றும் தன்மை கொண்டது.

இதையும் படிக்கலாமே:
பெறக்கூடாத 3 சாபங்கள்

மருத்துவ ஆலோசனை எப்போது தேவை?
பாத வெடிப்புகள் ஆழமாக இருந்து இரத்தம் வடிவதோடு வலி தருகின்றன என்றால், பாக்டீரியா அல்லது ஃபங்கஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கும். அவற்றின் அறிகுறிகள் (பிளவுகள், சிவப்புத் தோல், வீக்கம்) ஆகும். நீண்ட நாட்களாக குணமாகாத பாத வெடிப்புகள், வலியுடன் கூடிய வெடிப்புகள் இருந்தால் அல்லது பக்கவிளைவுகள் இருந்தால் டெர்மடாலஜிஸ்ட்டை தவறாமல் பார்க்கவும்.

- Advertisement -