- Advertisement -

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம்.பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்

பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் சமாளித்து விடுவீர்கள். சகோதரர்களால் மன வருத்தம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் சற்று பொறுமை காக்கவேண்டியது அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். மாணவ, மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்

உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும். அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும். வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

- Advertisement -

கடகம்

திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவி இடையில் சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும், அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் அதனால் மருத்துவச் செலவும் ஏற்படும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட சகோதரர்களும் உறவினர்களும் உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சலுகைகள் எதையும் இந்த மாதம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும், எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

கன்னி

வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலன் சற்று பாதிக்கப்படும் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த மாதம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த மாதம் எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. பொறுமை இழக்காமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

துலாம்

உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பலமுறை யோசித்து எடுப்பதால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதனால் மனநிம்மதி சற்று குறையக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளை முடிக்க உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். லாபமும் குறைவாகவே கிடைக்கும். புதிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்கவேண்டாம்.

விருச்சிகம்

சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படவும் அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் செய்யவும் நேரும். குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். சகோதரர்கள் வகையில் அனுகூலம் இருக்காது. அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள். மாணவ மாணவியர் பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும்.

தனுசு

பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலையே காணப்படுகிறது. மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்திருந்தால் இந்த மாதம் திரும்பக் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும்.

– Advertisement –
- Advertisement -

மகரம்

தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கும்பம்

செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த மாதம் ஈடுபடவேண்டாம். மாதத்தின் பிற்பகுதியில் கணவன் – மனைவி இடையில் சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்து செல்லவும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

மீனம்

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது.

வார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have December month Rasi palan in Tamil or December matha Rasi palangal in Tamil. This December month Rasi palangal covers Mesham to Meenam Rasi.

- Advertisement -