- Advertisement -
வீட்டு குறிப்புகள்

என்னது விளக்கு ஏற்ற எண்ணெய் தேவையில்லையா? இது என்ன புது தகவலாய் இருக்கே, எண்ணெய் இல்லாம கூட விளக்கு ஏத்த முடியுமா? அப்படின்னா இந்த தீபத்துக்கு ஒரு இடம் விடாம விளக்கை ஏத்திட வேண்டியது தான்.

- Advertisement -

கார்த்திகை தீபம் என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது வீடு முழுவதும் ஏற்றி இருக்கும் அகல் விளக்குகள் தான். இந்த அகல் விளக்கு தீபத்திற்கு என நாம் அதிக அளவில் செலவு செய்து எண்ணெய், திரிகள் போன்றவை வாங்குவோம். இந்த தீபத்திற்கு இவ்வளவு செலவு செய்யாமல் சிக்கனமாக எப்படி இந்த கார்த்திகை தீபத்தை கொண்டாடலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தீபத் திருநாளுக்கு முதல் நாளில் இருந்து வேலைகளை செய்ய தொடங்கி விடுவோம், அதில் முக்கியமாக வேலை அகல் விளக்குகளை சுத்தப்படுத்துவது. புதிய விளக்குகளை கொஞ்சம் வாங்கினாலும், பழைய விளக்குகளை எண்ணெய் பிசுக்கு போக தேய்த்து எடுத்து தான் விளக்கை ஏற்ற வேண்டும். இந்த பழைய விளக்குகளில் எண்ணெயை சுத்தப்படுத்துவது என்றும் சாதாரண விஷயம் இல்லை. அதற்கும் ஒரு எளிமையான வழி இருக்கிறது உங்கள் வீட்டில் இருக்கும் விளக்குகளின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். விளக்குகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். அதில் கொஞ்சம் கல் உப்பு, கொஞ்சம் துணி துவைக்கும் பவுடர், லிக்விட் எதுவாக இருந்தாலும் சேர்த்து தண்ணீர் கொதிக்கும் போது இந்த விளக்குகளை அதில் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

விளக்கை வெந்நீரில் அப்படியே சிறிது விட்டால் போதும் எண்ணெய் பிசுக்கு அனைத்தும் வெளியில் வந்து விடும். அதன் பிறகு விளக்குகளை எல்லாம் எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு வேறு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்து காட்டன் துணி வைத்து துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். விளக்குகள் எண்ணெய் பிசுக்கெல்லாம் நீங்கி புது விளக்கு போல் மாறிவிடும்.

அடுத்து தீபத்தன்று விளக்கு அதிகமாக ஏற்றுவோம் அத்தனை விளக்கிற்கும் அதிக திரி வாங்கி போடாமல், வீட்டில் வைத்திருக்கும் காட்டன் பேஷ்டி, துண்டு (பயன்படுத்தாமல் வைத்து இருக்கும்) போன்றவற்றை சின்ன சின்னதாக வெட்டி திரி போல சுருட்டி போட்டு தீபம் ஏற்றினால் திரி வாங்கும் செலவும் மிச்சம், எண்ணெய்யும் அதிகமாக குடிக்காது.

- Advertisement -

அடுத்த முக்கியமான குறிப்பு எண்ணெய் இல்லாமல் தீபம் ஏற்றுவது அதற்கு நீங்கள் அகல் விளக்கு அளவுக்கு வாழை இலைகளை சின்ன சின்னதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அகல் விளக்கில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி திரி போட்டுக் கொள்ளுங்கள் ( இது விளக்கு திரியாகவும் இருக்கலாம் அல்லது காட்டன் துணி திரியாகவும் இருக்கலாம்) பாதி அளவு தண்ணீர் இருக்கும் அகலில் திரி போட்ட பிறகு இரண்டு சொட்டு எண்ணெய் மட்டும் விடுங்கள், அதன் பிறகு நறுக்கிய வாழை இலையை விளக்கு மீது வைத்து விடுங்கள். (வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவரை கூட பயன்படுத்தலாம்). விளக்கின் மீது இருக்கும் வாழை இலை  திரி ஏற்ற கொஞ்சமாக இடம் விட்டு மூடி இருக்க வேண்டும்.  இப்பொழுது விளக்கை ஏற்றுங்கள் விளக்கு நின்று நிதானமாக எரியும். இதற்கு மேல் நீங்கள் எண்ணெய் ஊற்ற வேண்டாம் அந்த இரண்டு சொட்டு எண்ணெய் போதும்.

இது கொஞ்சம் வித்தியாசமான முறை தான் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இந்த தண்ணீர் தீபத்தை வீட்டில் ஏற்றி பாருங்கள்.

- Advertisement -