
தற்காலத்தில் ஆங்கில வழி கல்வி கற்ற பலருக்கும் தமிழ் மொழியைப் பேசுவதிலும், எழுதுவதிலும் சிரமங்கள் இருக்கின்றன. தமிழ் மொழியை இலக்கணத்துடன் கற்றுக் கொள்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தமிழ் மொழியின் முக்கியமான ஒரு பிரிவு, தமிழ் மொழியில் இருக்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளுக்கான எதிர்ச்சொல் வரிசையாகும். அந்த வகையில் இங்கு நாம் தமிழ் எதிர்ச்சொல் பட்டியல் (தமிழ் மொழியில் இருக்கின்ற முக்கியமான எதிர் சொல்கள்) குறித்து தெரிந்து கொள்ளலாம்.
| நல்வினை | தீவினை |
| வெம்மை | தன்மை |
| கீழ்த்திசை | மேல்திசை |
| வலம்புரி | இடம்புரி |
| தொடக்கம் | முடிவு |
| பிறப்பு | இறப்பு |
| இன்பம் | துன்பம் |
| வல்லினம் | மெல்லினம் |
| ஒற்றுமை | வேற்றுமை |
| உறவு | பகை |
| சிற்றூர் | பேரூர் |
| நீதி | அநீதி |
| புகழ்ச்சி | இகழ்ச்சி |
| வறுமை | வளமை |
| அமைதி | ஆரவாரம் |
| இணக்கம் | பிணக்கம் |
| பொய்மை | மெய்மை |
| மேதை | பேதை |
| முற்பகல் | பிற்பகல் |
| பகல் | இரவு |
| ஒழுக்கம் | இழுக்கம் |
| சற்று | மிகுதி |
| அரிது | எளிது |
| அகம் | புறம் |
| நல்லவர் | கெட்டவர் |
| பழமை | புதுமை |
| இனிப்பு | கசப்பு |
| இயற்கை | செயற்கை |
| ஆண் | பெண் |
| இம்மை | மறுமை |
| நேர் சொல் | எதிர்ச்சொல் வார்த்தைகள் |
|---|---|
| கலக்கம் | தெளிவு |
| காலை | மாலை |
| காலம் | அகாலம் |
| சிலர் | பலர் |
| செலவு | வரவு |
| சரி | தவறு |
| தூய்மை | மாசு |
| நீங்குதல் | சேர்தல் |
| பாவம் | புண்ணியம் |
| பிழை | திருத்தம் |
| பெருமை | சிறுமை |
| மன்னித்தல் | தண்டித்தல் |
| மேன்மை | கீழ்மை |
| வளர்ச்சி | தளர்ச்சி |
| உள்ளே | வெளியே |
| வீரன் | கோழை |
| மிகுதி | குறைவு |
| பெருகுதல் | சுருங்குதல் |
| போற்றுதல் | தூற்றுதல் |
| பள்ளம் | மேடு |
| நீண்ட | குறுகிய |
| ஏற்றம் | இறக்கம் |
| குறில் | நெடில் |
| உடன்பாடு | மாறுபாடு |
| இளமை | முதுமை |
| அருகில் | தொலைவில் |
| அமுதம் | நஞ்சு |
| நினைத்தல் | மறத்தல் |
| வைத்தது | எடுத்தது |
| வெற்றி | தோல்வி |
| நேர் சொல் | எதிர்ச்சொல் |
|---|---|
| தோராயமாக | சரியாக |
| கேள்வி | பதில் |
| அருகில் | தூரத்தில் |
| பெரியவர் | குழந்தை |
| முன் | பின் |
| எளிதான | கடினமான |
| நல்லது | கெட்டது |
| இரக்கமின்மை | கருணை |
| குளிர் | சூடு |
| நிலையானது | மாறக்கூடியது |
| போலி | உண்மை |
| சிறியது | பெரியது |
| நீளம் | சுருக்கம் |
| மங்கலான | பிரகாசமான |
| ஏற்றுமதி | இறக்குமதி |
| வெளிநாடு | உள்நாடு |
| தூரல் | அடைமழை |
| நேர் | எதிர் |
| எப்போதாவது | அடிக்கடி |
மேலும் பல எதிர்ச்சொற்கள் தமிழில் இதோ.
| மிருகம் என்பதன் எதிர்ச்சொல் மனிதன் |
| நிச்சயமாக என்பதன் எதிர்ச்சொல் அநேகமாக |
| உலர்ந்த என்பதன் எதிர்ச்சொல் ஈரமான |
| கூரை என்பதன் எதிர்ச்சொல் தரை |
| கிழக்கு என்பதன் எதிர்ச்சொல் மேற்கு |
| கீழ் எதிர்ச்சொல் மேல் |
| புறப்படு எதிர்ச்சொல் வந்தடை |
| மாணவன் எதிர்ச்சொல் மாணவி |
| நட எதிர்ச்சொல் ஓடு |
| மெதுவாக எதிர்ச்சொல் வேகமாக |
| சுத்தம் என்பதன் எதிர்ச்சொல் அசுத்தம் |
| வானம் என்பதன் எதிர்ச்சொல் பூமி |
| வெளிச்சம் என்பதன் எதிர்ச்சொல் இருள் |
| நறுமணம் என்பதன் எதிர்ச்சொல் நாற்றம் |
| வென்றான் என்பதன் எதிர்ச்சொல் தோற்றான் |
| தாத்தா என்பதன் எதிர்ச்சொல் பாட்டி |
| வெயில் எதிர்ச்சொல் நிழல் |
| அடக்கம் என்பதன் எதிர்ச்சொல் அடங்காமை |
| கோபம் என்பதன் எதிர்ச்சொல் சாந்தம் |
| மகிழ்ச்சி எதிர்ச்சொல் துன்பம் |
| அழகு என்பதன் எதிர்ச்சொல் அசிங்கம் |
பொதுவாக எதிர்ச்சொல் என்பது ஒரு சொல்லிருக்க நேர் எதிரான பொருளை உணர்த்தக்கூடிய ஒரு சொல்லாகும். இந்த எதிர்ச்சொல்லானது பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கக்கூடியவை தான். எல்லாவிதமான சொல்லுக்கும் எதிர்ச்சொல்லை கற்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு விடயம் கிடையாது என்றாலும் நாம் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய சில எதிர்ச்சொற்கள் தான் மேல உள்ளது. உதாரணமாக நன்மை – தீமை, நண்பன் – எதிரி, வேகமாக – மெதுவாக இப்படி எதிர்ச்சொற்கள் பல தொகுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் எதிர்சொற்க்கள் பட்டியல்(opposite words in Tamil) நிச்சயம் பள்ளி மாணவர்களுக்கு உதவும்.