- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

எதிரிகள் பிரச்சினை தீர விநாயகர் தீபம்

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருப்போம். அதேபோல் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்தித்திருப்போம். ஏமாற்றமும் துரோகமும் பிறரால் நமக்கு ஏற்படக்கூடியது. யாரும் தெரிந்தே ஏமாறுவதோ துரோகத்திற்கு ஆளாவதோ கிடையாது. ஒருவரை நம்புவதால் தான் ஏமாற்றமும் துரோகமும் ஏற்படுகிறது. நம் கண்ணுக்கே தெரிந்து நம்முடைய முன்னேற்றத்தில் தடைகளை தருபவர்கள் இருப்பது போல் நமக்கே தெரியாமல் நம்முடனே இருந்து கொண்டு நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்பவர்களும் இருப்பார்கள். இப்படி நம் கண்ணுக்கு தெரிந்த எதிரிகளாக இருந்தாலும் கண்ணுக்கு தெரியாத மறைமுக எதிரிகளாக இருந்தாலும் அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கவும் மேலும் அவர்களால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்கும் செய்யக்கூடிய விநாயகர் தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவகிரகங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் தெய்வமாக திகழ்ந்தவர் தான் விநாயகப் பெருமான். எந்த ஒரு பூஜையையும் வழிபாட்டியும் செய்வதற்கு முன்பாக முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு தான் செய்ய தொடங்குவோம். இதற்கு காரணம் விநாயகரை நாம் முதலில் வழிபடுவதன் மூலம் அந்த செயலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகரை நாம் எந்த முறையில் தீபம் ஏற்று வழிபட்டால் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை வீட்டு பூஜை அறையில் செய்யாமல் வீட்டு வரவேற்பு அறையிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு அறையிலோ இந்த வழிபாட்டை செய்யலாம். முடிந்த அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. இயலாதவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

முதல் நாள் சனிக்கிழமை அன்று வெள்ளெருக்க இலையை பறித்து வந்து அதை மஞ்சள் தண்ணீரால் சுத்தம் செய்து நன்றாக கசக்கி சாறு எடுத்து அதனுடன் சிறிது பன்னீரையும் கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பஞ்சுத் திரியை எடுத்து இந்த சாரில் நனைத்து காய வைத்து விடுங்கள். நன்றாக காய்ந்ததும் மறுபடியும் அதே சாரில் நனைத்து காய வைக்க வேண்டும். இப்படி மொத்தம் ஒன்பது முறை அந்த சாரில் நனைத்து காய வைக்க வேண்டும். இப்படி காய வைப்பதன் நோக்கம் என்னவென்றால் நவகிரகங்களின் தடைகள் நீங்க வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்கும் விநாயகரின் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமம் வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புதிதாக ஒரு அகல் விளக்கை எடுத்து வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி நாம் தயார் செய்து வைத்திருக்கும் பஞ்சு திரியை அதில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் மாவிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாயிலைகளை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து தோரணம் கட்டுவது போல் மாலையாக கட்டி அதை விநாயகருக்கு சாற்ற வேண்டும்.

விநாயகரின் உருவத்திற்கு ஏற்றவாறு ஒற்றைப்படை எண்ணிக்கையில் இலைகளை கோர்த்துக் கொள்வது சிறப்பு. இவ்வாறு மாலை சாற்றி விட்டு அவருக்கு ஒரு அருகம்புல்லையும் சமர்ப்பித்து விட்டு இந்த தீபத்தை ஏற்றி வைத்து விநாயகப் பெருமானிடம் உங்களுடைய எதிரிகள் யார் என்று உங்களுக்கு தெளிவாக தெரிந்திருந்தால் அவர்களின் பெயரையோ அல்லது முகத்தையோ ஞாபகம் படுத்தி அவரால் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

எதிரிகள் யார் என்றே தெரியவில்லை. ஆனால் தடைகளும் தடங்கல்களும் ஏற்படுகிறது என்னும் பட்சத்தில் மறைமுக எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தீர வேண்டும். அவர் யார் என்பதை எனக்கு அறிவுறுத்த வேண்டும் என்று விநாயகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த முறையில் விநாயகப் பெருமானுக்கு நாம் தீபம் ஏற்று வழிபட விநாயகர் பெருமானின் அருளால் எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர பாசிப்பருப்பு பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -