
ஒருவர் தன்னுடைய முகம் கருமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார். அதற்கு மாறாக வெள்ளையாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அவர்களுடைய உண்மையான நிறம் கருப்பாக இருந்தாலும் வெள்ளையாக இருந்தாலும் அதைவிட அதிக அளவில் வெள்ளையாக மாற வேண்டும் என்பதுதான் பலரது ஆசையாகவும் இருக்கிறது. இந்த ஆசை ஆண்களுக்கும் பொதுவானது தான். மேலும் தாய்மார்கள் தங்களின் பிள்ளைகள் நிறமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் உண்டு. இப்படி நிறமாக இருப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
வெள்ளையாக மாற வேண்டும் என்பதற்காக கடைகளில் பல கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் விற்கப்படுகிறது. இந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்தும் பொழுது நிறம் வெள்ளையாவதை நம்மால் உணர முடியும் என்றாலும் அதனால் முகத்தில் தேவையில்லாத பாதிப்புகளும் ஏற்படும். அந்த பாதிப்புகளை தவிர்த்து இயற்கையான பொருட்களை வைத்தே நம்முடைய முகத்தை வெள்ளையாக்க முடியும்.
இதற்கு நமக்கு நான்கு பொருட்கள் தேவைப்படும். ஒரு ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு, மூன்று ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பால், மூன்று ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறு இவை நான்கையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை நம்முடைய முகத்தில் தடவி கிளாக் வைஸ் ஆன்டி கிளாக் வைஸ் என்று முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இதை முகத்தில்தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை ஒரு சிலருக்கு வெயிலில் சென்று வருவதால் கைகள் கருப்பாக இருக்கும். அப்படி இருக்கும் கைகளுக்கும் இதை நாம் பயன்படுத்தலாம். கழுத்தில் கருமை படந்திருப்பவர்களும் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். எந்த இடத்தில் கருமை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் பொழுது அதில் இருக்கக்கூடிய கருமை என்பது நீங்குவதோடு இயற்கையான நிறத்தையோ அல்லது அதைவிட அதிகமான நிறத்தையோ நம்மால் பெற முடியும்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நான்கு பொருட்களுமே நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கி முகத்தை பிரகாசமாக மின்னச் செய்யக்கூடிய பொருட்களாகவே திகழ்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் இந்த நான்கு பொருட்களும் நம்முடைய வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். அனைவரின் இல்லத்திலும் இருக்கக்கூடிய பொருட்கள்தான் என்பதால் இதற்காக பெரிதும் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை.
15 நிமிடம் இந்த ஃபேஸ் பேக்கை அப்படியே முகத்தில் வைத்துவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும். தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த ஃபேஸ் பேக்கை போட்டு உலர விட்டு கழுவியப் பிறகு படுத்து உறங்குவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமை படிப்படியாக நீங்குவதை நம்மால் உணர முடியும்.
இதையும் படிக்கலாமே முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் நீங்க ஃபேஸ் பேக்
இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து நம்முடைய முகத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும் என்னும் பட்சத்தில் கெமிக்கல் நிறைந்த நிறைந்த பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது தானே. இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம். நன்மைகளை பெறுவோம்.