- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

ஒரே வாரத்தில் மங்கு மறைய ஃபேஸ் பேக்

- Advertisement -

முகம் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இருப்பார்கள். இன்னும் சிலரோ வெள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இன்னும் சிலரோ தங்கள் முகத்தில் எந்தவித கரும்புள்ளிகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இன்னும் சிலரோ பருக்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் போதும் என்று ஆசைப்படுவார்கள். இப்படி முகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சினைகள் தீர்ந்தால் போதும் என்று நினைக்கும் நபர்கள் இருப்பார்கள். அந்த வகையில் முகத்தில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக திகழ்வதுதான் மங்கு. இந்த மங்கை நீக்குவதற்கு பல கிரீம்கள் இருந்தாலும் இயற்கையான முறையில் முறையிலான தீர்வை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முகத்தில் ஆங்காங்கே கருமை திட்டுக்களாக உருவாவதை தான் மங்கு என்கிறோம். இப்படிப்பட்ட மங்கு நம்முடைய முகத்தில் அதிக அளவு பரவி பரவி கருமை தோற்றத்தை அதிகரித்து முகத்தின் அழகையே வீணாக்கி விடும். அப்படிப்பட்ட மங்கு உருவாவதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. எந்த காரணமாக இருந்தாலும் மங்கை சரி செய்வதற்கு உதவக்கூடிய ஒரு பேஸ் பேக்கை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பேஸ் பேக்கை தயார் செய்வதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் இருந்தால் போதும். அதில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக திகழ்வதுதான் அதிமதுரப்பொடி. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. இந்த பொடியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது ஒரு உருளைக்கிழங்கு. அந்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு அதை கேரட் துருவுவது போல் துருகி ஒரு வடிகட்டியை பயன்படுத்தி அதன் சாரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நமக்கு குறைந்தது இரண்டு ஸ்பூன் அளவிற்காவது உருளைக்கிழங்கு சாறு தேவைப்படும். இரண்டு ஸ்பூன் அளவு மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த உருளைக்கிழங்கு சாற்றில் அரை எலுமிச்சம் பழத்தின் சாறை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அதிமதுர பொடி ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுடைய முகத்தை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு இந்த அதிமதுர பொடி பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவ வேண்டும். மங்கு இருக்கும் இடத்தில் மட்டும்தான் தடவ வேண்டும் என்றெல்லாம் இல்லை முகம் முழுவதுமே தடவிக் கொள்ளலாம். இப்படி தடவி 30 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அப்படி இல்லை என்றால் இந்த ஃபேஸ் பேக் காயும் வரை அப்படியே விட்டுவிடலாம். பிறகு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக 7 நாட்கள் இரவு படுக்க செல்வதற்கு முன் செய்து வந்தால் விரைவிலேயே மங்கு மறைய ஆரம்பிக்கும் மங்கு இல்லாதவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம் அவர்களுடைய முகம் பொலிவாகவும் பிரகாசமாகவும் கரும்புள்ளிகள் எதுவும் இல்லாமலும் திகழும்.

இதையும் படிக்கலாமே வழுக்கை ஏற்படாமல் தடுக்க உதவும் ஹேர் பேக்

எளிதில் கிடைக்கக்கூடிய அதேசமயம் பல அற்புதமான மாற்றங்களை தரக்கூடிய பொருளாக திகழக்கூடிய அதிமதுரத்தை இப்படி பயன்படுத்தி முகத்தில் இருக்கக்கூடிய மங்கு கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பிரகாசமாக மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -