- Advertisement -
- Advertisement -

மீன் பிரியர்கள் மீன் வறுக்கும் பொழுது கொஞ்சம் கூட மசாலா வாசம் தெரியாத அளவிற்கு டேஸ்டியான வறுவல் எப்படி தயார் செய்வது? வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து ரொம்ப சுலபமாக தயார் செய்யக்கூடிய இந்த மசாலாவை தடவி, மீன் வறுத்தால் சுவை அப்படி இருக்கும்! கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காமல் லட்டு மாதிரி மசாலா எதுவும் தெரியாமல் சிவக்க சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுக்கலாம். சுவையான மீன் வறுவல் மசாலா எப்படி தயார் செய்ய போகிறோம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

மீன் வறுவல் மசாலா செய்ய தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் — ஒரு கிலோ
தனி மிளகாய்த்தூள் — ரெண்டு டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் — ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் — ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது — ஒரு டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை — ஒரு கொத்து
மல்லித்தழை — சிறிதளவு
உப்பு — தேவையான அளவு
எலுமிச்சை சாறு — ஒரு ஸ்பூன்

- Advertisement -

மீன் வறுவல் மசாலா செய்முறை விளக்கம் :
இந்த மீன் வறுக்க தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீன் வறுப்பதற்கு என்று தனியாக சீரகம் மற்றும் மிளகு சம அளவில் சேர்த்து எவ்வளவு தேவையோ அவ்வளவு முன்கூட்டியே நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்த இந்த மிளகு சீரகத்தை வைத்து சுலபமாக மீன் வறுவல் தயாரித்து விடலாம்.

முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். மீனை சுத்தம் செய்யும் பொழுது மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து சுத்தம் செய்யுங்கள், நீச்ச வாடை நீங்கும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள துண்டுகளை தண்ணீரில்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு வாயாகன்ற பாத்திரத்தில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு தனி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது வீட்டிலேயே அரைத்ததாக இருந்தால் இன்னும் ருசியாக இருக்கும்.

- Advertisement -

தனி மிளகாய்த்தூள் சேர்த்ததும் அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மிளகு சீரகத்தூள் ரெண்டு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். தனித்தனியாக அரைத்து வைத்திருந்தால் ஒரு ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து வையுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். கடைசியாக ஒரு கொத்து கருவேப்பிலை, கைநிறைய மல்லி தழையை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து கலந்து வையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பாதாம் பிசின் லட்டு செய்முறை

இப்போது மீன் துண்டுகளை இந்த கலவையுடன் சேர்த்து நன்கு எல்லா இடங்களிலும் படும்படி தடவிவிட வேண்டும். ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். ஃப்ரிட்ஜில் வைப்பதாக இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர் நீங்கள் சமைக்கும் பொழுது எடுத்து கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு ஒவ்வொரு துண்டுகளாக சேர்த்து இரண்டு புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொழுது மசாலா வாசம் எதுவும் வராது. முழுமையாக நன்கு வெந்து வரும். டேஸ்ட் சூப்பராக இருக்கும். எல்லா மீன்களையும் எடுத்த பின்பு சிறிதளவு எலுமிச்சை சாறை பிழிந்து பரிமாற வேண்டியதுதான். அட்டகாசமான மீன் வறுவல் ரெடி!

- Advertisement -