- Advertisement -
- Advertisement -

கருப்பாக இருந்தாலும், மாநிறமாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும் முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றுதான் அனைவருமே நினைப்போம். ஆனால் இந்த காலகட்டத்தில் பலரது முகமும் சோர்வடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. அந்த சோர்வையும், முகச்சுருக்கத்தையும் நீக்கி பளிச்சென்று பிரகாசமான முகத்தை பெறுவதற்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த ஒரு கிரீமை பயன்படுத்தினால் போதும். அந்த கிரீமை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பளிச்சென்று முகத்தை பெற

நம்முடைய முகத்தை பளிச்சென்று பிரகாசமாக மாற்றுவதற்கும், முகச்சுருக்கத்தை நீக்கவும், கருமையை மாற்றவும் உதவக்கூடிய பல பொருட்கள் நம்முடைய வீட்டிலேயே இருக்கின்றன. அந்த பொருட்களை கண்டறிந்து அதை முறையாக பயன்படுத்தினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய நிறத்திலும் நல்ல முன்னேற்றம் தெரியும். முகமும் பளிச்சென்று பிரகாசமாக மாறும். அந்த வகையில் பாதாம் பருப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு கிரீமை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாக 15 பாதாமை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். 12 மணி நேரம் கழித்து பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு இந்த பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் காய்ச்சாத பசும்பால் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் கெமிக்கலோ, வாசனையோ, நிறமோ கலக்காத கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதை காற்று போகாத பாட்டிலில் போட்டு மூடி போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்தும் இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக கழுவி விட்டு இந்த கிரீமை முகம் கழுத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து படுத்து உறங்க வேண்டும். பாதாம் பருப்பில் விட்டமின் இ சத்து அதிகம் இருப்பதால் அது நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கத்தையும் நீக்கும். அதே சமயம் கருமையும் விரட்டி அடிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் கற்றாழை ஜெல் மற்றும் பால் இருப்பதால் நம்முடைய முகத்தை பிரகாசமாகவும் மாற்ற உதவும். தினமும் தொடர்ச்சியாக இந்த கிரிமை நம்முடைய முகத்தில் இரவு நேரத்தில் தடவி வருவதன் மூலம் முக நிறத்தில் நல்ல முன்னேற்றத்தையும், பிரகாசமான முகத்தை பெற முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:தலைமுடி ஆரோக்கியமாக இருக்க

கடைகளில் விற்கக்கூடிய கிரீம்களை வாங்கி தடவி நம்முடைய நிறத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கெமிக்கல் நிறைந்த அந்த கிரீம்களை உபயோகப்படுத்தாமல் வீட்டிலேயே இந்த முறையில் க்ரீம் தயார் செய்து உபயோகப்படுத்த நல்ல இயற்கையான பளிச்சென்ற முகத்தை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -