
நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களால் நமக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் எந்த செயலிலும் நமக்கு வெற்றிகள் கிடைக்காது. தடைகளும் தாமதங்களுமே ஏற்படும். பணம் தொடர்பான பிரச்சனைகள், வேலை தொடர்பான பிரச்சனைகள், குடும்பத்தில் நிம்மதியின்மை, சண்டை சச்சரவுகள் ஏற்படுவது என்று பல பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைகள் நீக்க வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்க வேண்டும். இப்படி எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு பல பரிகாரங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையான முறையில் பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நம்மால் நீக்க முடியும். முதலில் நம்மிடம் இருந்து வெளியே வரக்கூடிய வார்த்தைகள் நேர்மறையான வார்த்தைகளாக இருக்க வேண்டும். எதிர்மறை வார்த்தைகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். பிறகு நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கு பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கும் நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறைகளில் ஒன்று தான் முகம் கழுவும் முறை. முகத்தை கழுவும் பொழுது சில பொருட்களை நாம் கழுவும் தண்ணீரில் கலந்து கழுவுவதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் விலகும் என்று கூறப்படுகிறது. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அது நிறைய தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கைகளால் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை அதில் போட வேண்டும். பிறகு பன்னீர் ரோஜா இதழ்கள் ஒன்றாவது அதில் சேர்க்க வேண்டும். இப்பொழுது வீட்டின் மையப் பகுதியில் அமர்ந்து இந்த பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு உங்களுக்கு என்ன தடைகள் இருக்கிறதோ அந்த தடைகள் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இப்படி வேண்டி முடித்த பிறகு வீட்டிற்கு வெளியே வந்து இடது கையால் அந்த தண்ணீரை எடுத்து வலது கையில் ஊற்றி அந்த வலது கையை கொண்டு உங்கள் முகத்தில் இந்த தண்ணீர் படும்படி துடைக்க வேண்டும். கழுவக்கூடாது, துடிக்க தான் செய்ய வேண்டும். பிறகு இரண்டு உள்ளங்கைகளையும் அந்த தண்ணீரை தொட்டு துடைக்க வேண்டும். அதேபோல் உள்ளங்கால்களையும் துடைக்க வேண்டும்.
இப்படி துடைத்து விட்டு இந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். அவ்வளவுதான் இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் நாம் செய்தாலே நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதால் தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். பண பிரச்சினை நீங்கும். கடன் சுமை குறையும். நினைத்த செயல்கள் நினைத்தபடி நடைபெறும்.
இதையும் படிக்கலாமே:வீட்டில் சேர்ந்து இருக்க வேண்டிய பொருள்கள்
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் இந்த பரிகாரத்தை செய்து தங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விலக்கி தடைகளை நீக்கி வாழலாம்.