- Advertisement -

மாதத்தில் வரக்கூடிய 30 நாட்களிலும் திதிகள் வரும். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை வரக்கூடிய திதிகளை தேய்பிறை திதிகள் என்றும் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வரக்கூடிய திதிகளை வளர்பிறை திதிகள் என்றும் கூறுவோம். இந்த திதிகளின் அடிப்படையில் அதற்குரிய தெய்வங்களை வழிபடும் பொழுது அதனால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் ஏகாதசி திதி என்பது பெருமாளுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் நமக்கு யோகம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கர்ம வினைகளை நீக்கி யோகத்தை தரக்கூடிய தானம்

வாழ்கின்ற வாழ்க்கையில் நல்லவிதமாக நாம் வாழ வேண்டும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் பெருமாளை நாம் வழிபட வேண்டும். ஒருவர் பெருமாளை எந்த அளவிற்கு வழிபடுகிறார்களோ அந்த அளவிற்கு மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மகாலட்சுமி என்பவள் பதி பக்தை. யார் ஒருவர் பெருமாளை மனதார வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வீட்டிற்கு கூப்பிடாமலேயே செல்லக் கூடியவர்களாக தான் நம் மகாலட்சுமி திகழ்கிறார்.

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் ஏகாதசி என்பது வரும். அதுவும் வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று மாதத்தில் இரண்டு முறை இந்த திதி வரும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் இருக்கிறது என்றும் அந்த ஏகாதசி திதி அன்று நாம் விரதம் இருந்து பெருமாளை வழிபடும் பொழுது அந்தந்த மாதத்திற்கு ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது என்றும் ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த பலன்களுக்கு ஏற்றவாறு நாமும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.

இதை தவிர்த்து விரதம் இருக்க முடியாது ஆனால் என்னுடைய வாழ்க்கை நல்லவிதத்தில் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏகாதசி திதி அன்று சில தானங்களை தர வேண்டும். நம்முடைய கர்ம வினைகள் குறைய வேண்டும் என்றால் அதற்கு தானம் ஒன்றே மிகவும் சிறந்த வழியாக திகழ்கிறது. அதுவும் ஏகாதசி திதி அன்று தானம் செய்யும் பொழுது பெருமாளின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அதனால் கர்ம வினைகளும் குறைந்து நமக்கு யோகமும் ஏற்படும்.

- Advertisement -

அப்படி ஏகாதசி அன்று செய்யக்கூடிய எளிமையான தான பொருட்களை தெரிந்து கொள்வோம். இந்த தானத்தை யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஏகாதசி திதி எப்பொழுது ஆரம்பித்தாலும் பரவாயில்லை, ஆனால் மாலை 5 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஏதாவது ஒரு பொருளை மட்டுமாவது ஒருவருக்காவது தானம் செய்தாலும் இதன் பலனை நம்மால் பெற முடியும்.

அப்படி நாம் தானம் செய்ய வேண்டிய பொருட்கள் தண்ணீர், தானியம், பழங்கள், எள், ஆடை. இந்த ஐந்து பொருட்களையும் தானம் செய்யலாம். அல்லது இந்த ஐந்தில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது நாம் தானம் செய்யலாம். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஏகாதசியும் இந்த பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை யாருக்காவது தானம் செய்து கொண்டே வர உங்களுடைய கர்ம வினைகள் படிப்படியாக நீங்கி யோகமான வாழ்க்கை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர பைரவ மந்திரம்

இந்த எளிமையான தானத்தை நம்பிக்கையுடன் பிறருக்கு உதவி செய்யும் வகையில் செய்து யோகமான வாழ்க்கையை பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -