- Advertisement -

கிரக தோஷங்கள் நீங்க சனிக்கிழமை பரிகாரம்

- Advertisement -

வாழ்க்கையில் சங்கடங்கள் வர காரணமாக இருப்பது ஒரு சில கிரகங்கள் தான். நல்ல கிரகங்கள், பாவ கிரகத்தோடு சேரும்போது நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் வரும். இப்படி நமக்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடிய பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ராகு கேது பகவான், சனி பகவான். இந்த மூவர்தான். இவர்களை சாந்தி செய்து விட்டாலே போதும். துன்பத்திலிருந்து சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம். அதற்கு உண்டான ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சங்கடங்கள் தீர சனிக்கிழமை பரிகாரம்

சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நேரமெல்லாம் கிடையாது காலை அல்லது மாலை உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப பரிகாரத்தை செய்யலாம். ஒன்பது, 1 ரூபாய் நாணயங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஒன்பது, ஒரு ரூபாய் நாணயங்களையும் வலது உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, உங்களுடைய தலையை 9 முறை சுற்ற வேண்டும். ஆன்டி கிளாக் வைஸ் தலையை சுற்றிக் கொள்ளுங்கள். பிறகு இந்த ஒரு ரூபாய் நாணயங்களை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, குலதெய்வத்தை நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வாழ்வில் இருக்கும் துன்பங்கள் எல்லாம் விலக வேண்டும். இனி வரக்கூடிய நாட்களில் வாழ்க்கையில் நல்லதே நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லலாம் அல்லது வேறு எந்த கோவிலுக்கா இருந்தாலும் செல்லலாம். ஆனால் அந்த கோவிலில் நவகிரக சன்னிதானமோ அல்லது பைரவர் சன்னிதானமோ இருக்க வேண்டும்.

அப்படி ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அந்த கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்துவிட்டு, வீடு திரும்பும் போது, இந்த ஒரு ரூபாய் நாணயங்களை தானம் கொடுக்க வேண்டும். இந்த ஒரு ரூபாய் நாணயங்களை பைரவர் சன்னிதானத்தில், பைரவர் பாதத்தில் வைக்க முடிந்தாலும் வைக்கலாம், அல்லது சனி பகவான் பாதத்தில் வைப்பதாக இருந்தாலும் வைக்கலாம், அல்லது அந்த கோவிலுக்கு வெளியில் யாசகம் செய்பவர்கள் கையில் இந்த நாணயங்களை தானமாக கொடுத்து வந்தாலும் சரி தான்.

- Advertisement -

உங்களுடைய பிரச்சனைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சனிக்கிழமை அல்ல, 9 சனிக்கிழமைகள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நீங்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நல்லது அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் வரிசையாக நடக்க தொடங்கிவிடும். வரிசையாக நடந்து வந்த கெட்ட சம்பவங்கள் எல்லாம் படிப்படியாக குறையும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் நெருக்கடியான சூழலில் ஏற்ற வேண்டிய தீபம்

நம்பிக்கை மட்டும் தான் இந்த பரிகாரத்திற்கு மூலதனம். நவகிரகங்கள் உங்களுக்கு நன்மை செய்யும் என்று நம்புங்கள். சிவபெருமான் உங்களை கைவிட மாட்டார் என்று நம்புங்கள். குலதெய்வம் காக்கும் என்று நம்புங்கள். பிறகு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -