- Advertisement -
- Advertisement -

நம்முடைய தலைமுடி எந்த அளவிற்கு அழகாகவும் மிருதுவாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய முகமும் அழகாக தெரியும். அப்படி முகத்தின் அழகை பிரதிபலிக்கக்கூடிய முடியில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி ஆரோக்கியமான முடியை பெற வேண்டும் என்றால் அதற்காக நாம் பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறைதான் ஹேர்பேக். இந்த ஹேர் பேக்கை நாம் வாரத்திற்கு இரண்டு முறையோ ஒரு முறையோ நம்முடைய தலைமுடியில் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு ஏற்றவாறு நாம் உபயோகப்படுத்துவோம்.

எந்த பொருட்களை வைத்த ஹேர் பேக் செய்தாலும் அதற்கென்று தனியாக வழிமுறை இருக்கிறது. எப்பொழுதெல்லாம் நாம் ஹேர் பேக் தயார் செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் அதற்குரிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதற்காக நாம் நேரத்தை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். இதனாலேயே பலரும் தங்களுடைய தலைமுடிக்கு ஹேர் பேக்கை உபயோகப்படுத்துவது கிடையாது. இதை சரி செய்வதற்குரிய ஒரு எளிமையான வழிமுறையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஹேர் பேக் தயார் செய்யும் பொழுதெல்லாம் நம்முடைய நேரமானது வீணாகிறது. அந்த நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் போட வேண்டிய ஹேர் பேக்கை ஒரே ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொள்ள அதை இரண்டு மாதம் வரை நம்மால் உபயோகப்படுத்த முடியும். அப்படி தயார் செய்வதற்குரிய வழிமுறையை பற்றி பார்ப்போம்.

இந்த ஹேர் பேக்கை தயார் செய்வதற்கு நமக்கு கருவேப்பிலை, பச்சைப்பயிறு, வெந்தயம், கருஞ்சீரகம் போன்றவை தேவைப்படும். இவை அனைத்துமே தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய ஒன்றாகவும், தலைமுடியின் நிறத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாகவும் தலைமுடியை மிருதுவாக வைத்துக் கொள்ளக்கூடியதாகவும் திகழக்கூடியவை.

- Advertisement -

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை போட்டு அதன் நீர் சத்து போகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் ஒரு கப் அளவிற்கு பச்சை பயிறு, 20 கிராம் அளவிற்கு வெந்தயம், 20 கிராம் அளவிற்கு கருஞ்சீரகம் மூன்றையும் போட்டு அந்த சூட்டிலேயே அப்படியே வைத்து விடுங்கள். இப்பொழுது இவை அனைத்தும் நன்றாக ஆரியபிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இதை ஒரு ஈரம் இல்லாத காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். இதுதான் இன்ஸ்டன்ட் ஹேர் பேக். இந்த ஹேர் பேக்கை நாம் எப்பொழுது எல்லாம் தலைக்கு ஹேர்பேக் போட வேண்டும் என்று நினைக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஒரு கிண்ணத்தை எடுத்து நம்முடைய தலைமுடிக்கு தேவையான அளவு போட்டு அரிசி கழுவிய தண்ணீர், தயிர், சாதம் வடித்த கஞ்சி, தண்ணீரை இதில் ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தி ஹேர் பேக்காக தயார் செய்து கொள்ள முடியும்.

- Advertisement -

தயார் செய்து இந்த ஹேர் பேக்கை 10 நிமிடம் அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். பிறகு உங்களுடைய தலைமுடியில் லேசாக எண்ணை தடவி இந்த ஹேர் பேக்கை உங்களுக்கு தலையில் பயன்படுத்த வேண்டும். அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை இந்த ஹேர் பேக் உங்களுடைய தலையில் இருக்கலாம். இதனால் சளி பிடிக்கும் என்ற பயமும் தேவையில்லை. பிறகு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: கரும்புள்ளிகள் மறைய

வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து இன்ஸ்டன்ட் ஹேர் பேக்கை நாம் தயார் செய்து வைத்துக் கொண்டால் நாம் நினைக்கும் பொழுதெல்லாம் ஹேர் பேக் பயன்படுத்தி நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -