- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தின் அதிசய வைக்கும் உண்மைகள்.

அதர்மம் தலை தூக்கும் போது உலகத்தை காக்க கடவுளானவர் அவ்வபோது அவதாரங்கள் எடுப்பது குறித்த தகவல்கள் புராணங்கள் பலவற்றில் இருப்பது அனைவரும் அறிந்ததே. விஷ்ணு பகவான் பத்து அவதாரங்கள் எடுப்பார் என்றும் அதில் 9 அவதாரங்கள் வெவ்வேறு யுகங்களில் எடுக்கப்பட்டாயிற்று என்றும் கூறப்படுகிறது. தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் அதர்மம் தலை விரித்தாடும் போது தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பார் என்று நம்பப்படுகிறது.

பகவானின் தசாவதாரங்கள் என்னென்ன? என்பதை சுருக்கமாக இப்போது காணலாம்.

- Advertisement -

1. மச்சாவதாரம்:
சோமுகாசுரன் பிரம்ம தேவரிடமிருந்து வேதங்களை திருடச்சென்று கடலுக்கடியில் மறைத்துவிட்டான். அவற்றை மீட்க மீன் உருவில் விஷ்ணு அவதரித்து அந்த அசுரனை அழித்து வேதங்களை பிரம்மனிடம் திரும்ப கொடுத்தார்.

2. கூர்மாவதாரம்:
அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்த போது மந்திரமலை என்ற மலை தான் மத்தாக இருந்து உதவி புரிந்தது. அம்மலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை உருவில் விஷ்ணு அவதாரமெடுத்து தன் முதுகில் தாங்கி நின்றார்.

- Advertisement -

3. வராக அவதாரம்:
பாதாள உலகத்திற்கு தேவர்களை கொண்டு சென்று இரணியாட்சன் என்ற அசுரன் அடைத்து வைத்த போது வராக உருவில் அவதாரமெடுத்து பூமியை தோண்டிச்சென்று அவனை அழித்து தேவர்களை காப்பாற்றினார்.

4. நரசிம்ம அவதாரம்:
தன் மேல் அதீத பக்தி கொண்ட பக்த பிரகலாதனை இரணியனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம உருவில் அவதரித்தார்.

- Advertisement -

5. வாமன அவதாரம்:
மகாபலியின் ஆணவம் அடக்க வாமன அவதாரம் புரிந்து முக்தி கொடுத்தார்.

6. பரசுராம அவதாரம்:
ஜமதக்னி என்ற முனிவருக்கு மகனாக பிறந்து பரசுராம அவதாரம் எடுத்து தந்தை சொல் கேட்டு தாயின் தலையை சீவி மீண்டும் உயிர்ப்பிக்க வரம் கேட்டு தந்தையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

7. ராமாவதாரம்:
அதர்மத்தை அழிக்கவும், ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உலகிற்கு உணர்த்தவும் ராமாவதாரம் புரிந்தார்.

8. பலராம அவதாரம்:
கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு விஷ்ணு பகவானின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் பலராம அவதாரம் எடுத்து துணை புரிந்ததாக பலராம வரலாறு கூறுகிறது.

9. கிருஷ்ணாவதாரம்:
குரு ‌ஷேத்திர யுத்தத்தில் அதர்மத்தை அழித்து தர்மம் நிலை நாட்ட எடுக்கப்பட்ட முக்கிய அவதாரம் கிருஷ்ணாவதாரமாக கருதப்படுகிறது.

10. கல்கி அவதாரம்:
கிருஷ்ணாவதாரத்தில் விஷ்ணு பகவான் தர்மம் மீண்டும் அழியும் தருவாயில் அதர்மம் அழித்து தர்மத்தை நிலை நாட்ட அவதாரம் எடுப்பேன் என்று கூறியுள்ளார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக பகவத் கீதையில் கலியுகம் முடியும் போது அதர்மம் கோர தாண்டவம் புரியும். அனைத்தும் சர்வ நாசம் அடையும். அப்போது கல்கி அவதாரம் தோன்றும் என்று கூறபட்டுள்ளது.

நான்கு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது தான் கலியுகம். தற்போதைய நிலவரப்படி ஐந்தாயிரம் ஆண்டுகள் தான் கடந்தாகியிருக்கின்றன. அப்படி பார்த்தால் இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்கள் இருக்கின்றன. ஆனால் கல்கி அவதாரத்தின் போது என்னவெல்லாம் நடக்கும் என்று கூறப்பட்டதோ அவற்றில் நிறைய விஷயங்கள் தற்போது குறிப்பால் உணர்த்துவதை இல்லை என்றும் கூற முடியாது.

கல்கி அவதாரத்தின் போது உலகம் அநியாயம் நிறைந்ததாக இருக்கும். புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி முழுவதுமாக வற்றிவிடும். பசுக்கள் அழிந்து போகும். அசைவம் அதிகம் விரும்பப்பட்டு உணவாக கொள்ளப்படும். கணவன் மனைவி உறவி மிகவும் மோசமான நிலையில் இருக்கும். ஒருவரை ஒருவர் மதிக்காமல் வேற்று நபர்களிடம் வெளிப்படையாகவே உறவில் இருப்பார்கள். மனித நேயம் காணமலே போகும். ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைப்பார்கள். இறை நம்பிக்கை குறைந்து காணப்படும். கோவில்களில் முறையான வழிபாடுகள் இருக்காது.

இப்புவி மிகுந்த வெப்பமடைந்து நோய்கள் முற்றி காணப்படும். உயிரினங்களின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துவிடும். பருவ கால மாற்றங்கள் சரியாக இயங்காது. நட்சத்திரங்கள் ஒளி மங்கி காணப்படும். மக்களை சுரண்டும் தலைவர்கள் தான் இருப்பார்கள். சொத்துக்காக தாய், தந்தையை கூட கொன்று விடுவார்கள். சுயநலம், சோம்பேறித்தனம், பலவீனம், மூர்கத்தனம் இவையெல்லாம் மனிதர்களிடத்தில் மேலோங்கி காணப்படும். யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். இதில் பலவற்றை நடைமுறை வாழ்க்கையில் மாறி கொண்டிருப்பதை நம்மால் இப்போதே உணர முடிகிறதல்லவா?

கல்கி அவதாரம் எப்படி இருக்கும் தெரியுமா? மேற்கண்ட மிக மோசமான சூழ்நிலையில் பூமியானது இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது கொடுங்கோல் புரியும் அதர்மக்காரர்களை அழிப்பதற்காக கல்கி அவதாரம் நிகழும். கல்கி மிகுந்த பக்தி நெறியில் இருக்கும் ஒரு தம்பதியின் வயிற்றில் அதீத புத்திக்கூர்மையுடன், ஆஜானுபாகுவான உடல் வலிமையுடன் அனைத்திலும் சிறந்த அறிவாற்றலுடன் சம்பல என்னும் ஊரில் பிறப்பார். கல்கி அவதரிக்கும் நேரமாக புரட்டாசி மாதம் சுக்லபட்ச த்விதீயை திதியில் பிறப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அசுரர்களை அழிக்க வெள்ளை குதிரையில் வருவார் என்று குறிப்பிடப்படுகிறது.

கலியுகத்தின் அழிவிற்கு பிறகு சூரியன், சந்திரன், குரு மூவரும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் போது கிருத யுகம் துவங்கும் என்று கூறப்படுகிறது. அப்போது அன்பு நிறைந்து பூமி இயங்கும். பகவானே மன்னராக இருந்து மாரியும் பொழிய வைப்பார். இவையெல்லாம் நம்பும்படி இல்லாவிட்டாலும் புராணத்தில் உள்ளது போல் தற்போது நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களை பார்க்கும் பொழுது சிந்திக்கத்தான் வேண்டியுள்ளது.

இதையும் படிக்கலாமே
நல்லதே நடக்காதா என்ற எண்ணமா? வியக்க வைக்கும் மாறுதல்களை தரும் சங்கு வழிபாடு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have When kalki avatar. Kalki avatharam story in Tamil. Kalki avatharam history in Tamil. Vishnu kalki avatharam in Tamil.

- Advertisement -