- Advertisement -
வீட்டு குறிப்புகள்

இயற்கையான முறையில் வீட்டிலேயே பாத்திரம் தேய்க்கும் லிக்விட் தயாரித்தல்.

- Advertisement -

வீட்டு வேலைகள் என்று கூறும் பொழுது அதில் இன்றியமையாமல் அன்றாடமும் இடம்பெறக்கூடிய ஒரு வேலை தான் பாத்திரம் கழுவுதல். இன்றைய காலகட்டத்தில் பாத்திரங்களை கழுவுவதற்கு டிஷ் வாஷ் லிக்விட் என்று கடைகளில் பலவிதமாக விற்கப்படுகிறது. இவை அனைத்திலும் ஏதாவது ஒரு கெமிக்கல் கலந்திருக்கும். இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் இயற்கையான முறையில் கெமிக்கல் இல்லாமல் பாத்திரம் தேய்க்கும் லிக்விடை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

பலருக்கும் கடைகளில் விற்கக்கூடிய லிக்விடை உபயோகப்படுத்தும் பொழுது அலர்ஜி தன்மை ஏற்பட்டு கைகளில் எரிச்சல்களோ, வீக்கங்களோ அல்லது சிவந்து போய் இருப்பதோ ஏற்படும். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்த லிக்விடில் கலந்து இருக்கும் கெமிக்கல்கள் மட்டுமே. இயற்கையான முறையில் உள்ள லிக்விட் என்று விற்றாலும் அதில் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு கெமிக்கல் கலந்து இருக்க தான் செய்கிறது. எந்தவித கெமிக்கலும் இல்லாமல் தயாரிக்க கூடிய லிக்விடை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த லிக்விடை தயார் செய்வதற்கு முதலில் பூந்திக்காய் தேவைப்படும். 10 பூந்திக்காயை எடுத்து அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கி 5 மணி நேரம் 200 மில்லி தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் கழித்து அதில் நான்கு அல்லது ஐந்து எலுமிச்சம் பழங்களை நான்காக நறுக்கி போட வேண்டும். ஏதாவது ஒரு சிட்ரிக் பழமாக இருந்தால் கூட போதும். அடுத்ததாக இதை 15 நிமிடம் வரை அடுப்பில் குறைந்த தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்துவிட்டு அதை நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வேக வைத்திருக்கும் பூந்திக்கொட்டை மற்றும் எலுமிச்சம் பழத்தை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதில் 100 மில்லி லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் வடிகட்டிய அந்த சக்கையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து மறுபடியும் 100ml தண்ணீர் ஊற்றி நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது 200 மில்லி லிட்டர் வடிகட்டிய திரவம் கிடைத்திருக்கும்.

- Advertisement -

இதை மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து விட்டு, அதில் 100 மில்லி வினிகரை சேர்க்க வேண்டும். அடுத்ததாக 50 கிராம் கல் உப்பை சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவுதான் டிஷ் வாஷ் லிக்விட் தயாராகி விட்டது. இது ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது அதை உபயோகப்படுத்தி பாத்திரத்தை தேய்த்துக் கொள்ளலாம்.

இதில் பூந்தி கொட்டை இருப்பதால் நுரை நன்றாக வரும். மேலும் எலுமிச்சம் பழத்தை நாம் சேர்த்திருப்பதால் அதில் இருந்து நல்ல நறுமணம் கிடைக்கும். மேலும் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். வினிகரை சேர்த்திருப்பதால் பாத்திரத்தில் இருக்கக்கூடிய கறைகள் எளிதில் நீக்கப்படுகிறது. கல்லுப்பு பாத்திரத்தில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்க உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்களை கைப்படாமல் ஐந்தே நிமிடத்தில் பளிச்சென மாற்ற சூப்பரான ஐடியா.

இயற்கையான முறையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து நம்மால் எளிமையான முறையில் பாத்திரம் தேய்க்கும் லிக்விடை தயார் செய்ய முடியும்.

- Advertisement -