- Advertisement -
வீட்டு குறிப்புகள்

வீட்டை சுத்தம் செய்யும் முறை

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி எப்பொழுதும் வீட்டில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளில் ஒன்று தான் இந்த வீட்டை சுத்தம் செய்வது. இதையெல்லாம் செய்வது ஒரு வேலை இல்லை நம்முடைய கடமை என்று நினைத்தாலும் கூட, தினமும் இதையே செய்து கொண்டே இருந்தால் ஒருவித அனுப்பும் சலிப்பும் வருவது இயல்பு தானே.

அப்படி அல்லாமல் ஒரு முறை சுத்தம் செய்தால் குறைந்தது ஒரு வாரமாவது வீடும் தரையும் சுத்தமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கான ஒரு எளிய குறிப்பை பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தரை பளிச்சென்று இருக்க

எப்போதுமே வீடு துடைப்பதற்கு முன்பாக தரையில் மண் தூசி இல்லாதவாறு பெருக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு துடைத்தால் தான் தரை சுத்தமாகும் இல்லை என்றால் ஆங்காங்கே இந்த தூசுகள் திட்டு திட்டாக படிந்து விடும்.

இப்போது வீட்டை துடைக்க ஒரு பக்கெட் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு கல் உப்பு, மஞ்சள் தூள் சிறிதளவு, டெட்டால், துணிகளுக்கு இடையில் வைக்க பயன்படும் பாச்சா உருண்டையை கொஞ்சம் தூள் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளை ஒன்றாக கலந்து வீட்டில் ஒரு முறை சுத்தமாக துடைத்துக் கொள்ளுங்கள். இந்த கல்லுப்பையும், மஞ்சளும் கலந்து துடைக்கும் போது தரையில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக படிந்திருப்பது போல தோன்றும் இதற்கு காரணம் மஞ்சளும் கல் உப்பு கிடையாது.

- Advertisement -

சிலர் வீடு துடைக்க ஆரம்பித்த உடனே மின்விசிறியை போட்டு விட்டு துடைப்பார்கள். அப்படி துடைக்கும் பட்சத்தில் ஆங்காங்கே இது போல திட்டு திட்டாக இருக்கும். ஆகையால் வீட்டை நன்றாக துடைத்து தண்ணீரையும் துடைத்த பிறகு மின்விசிறியை போட்டால் இது போல கறைகள் பிடிக்காது. இப்படி தரையை சுத்தம் செய்து காய்ந்த பிறகு மறுபடியும் கறை படியாமல் இருக்க செய்யக் கூடிய இந்த டிப்ஸையும் ஃபாலோ பண்ணுங்க.

ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரும் அதில் நாம் தலைக்கு பயன்படுத்தும் கண்டிஷனரை கலந்து கொள்ளுங்கள். கண்டிஷனர் தண்ணீரில் கரையாது ஆகையால் கை வைத்து நன்றாக கரைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதை நீங்கள் துடைத்த தரையின் மீது லேசாக ஸ்பிரே செய்த பிறகு மறுபடியும் மாப் வைத்து துடைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பழைய சீருடைகளை அழுக்கு போக துவைக்க வீட்டு குறிப்பு

இப்படி துடைப்பதன் மூலம் தரை நல்ல மணதுடன் இருப்பதுடன் கண்டிஷனர் போட்டு துடைத்த பிறகு அதில் சீக்கிரத்தில் கறைகள் பிடிக்காது. தூசுகள் ஒட்டாது நீங்கள் அடிக்கடி தரையை சுத்தம் செய்ய வேண்டிய வேலையும் இருக்காது. வீட்டை சுத்தம் செய்யக் கூடிய எளிய இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டாயம் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -