- Advertisement -

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இந்த செல்வ செழிப்பை பெறுவதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். இந்த செல்வ செழிப்பை எந்தவித தடைகளும் இல்லாமல் பெறுவதற்கு விநாயகப் பெருமானின் அருளும் வேண்டும். இப்படி இவர்கள் இருவரின் அருளைப் பெறுவதற்கு செய்யக்கூடிய எளிமையான மூலிகை வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ரெண்டு பொருள் இருந்த நீங்க எல்ல செல்வத்தையும் அடையாளம்

ஒவ்வொரு செடிகளுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணம் இருக்கும். மருத்துவ குணத்தோடு சேர்ந்து மகத்துவமான குணங்களும் இருக்கும். எப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை என்று ஒரு தெய்வம் இருக்கிறதோ, அதே போல் ஒவ்வொரு செடிக்கும் அதிதேவதை என்று ஒரு தெய்வம் இருக்கும். அந்த தெய்வமானது அந்த செடிகளில் நீக்கமற நிறைந்திருக்கும். அந்தச் செடி இருக்கும் இடத்தில் அந்த தெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி தெய்வம்சம் பொருந்திய செடிகளில் பல நமக்கு தெரிந்திருக்கும் நாமே அந்த செடிகளை வைத்து வீட்டில் வளர்ப்போம்.

- Advertisement -

அப்படி வளர்க்கக் கூடிய மிகவும் முக்கியமான செடிகளில் ஒன்றாக திகழ்வது தான் துளசிச் செடி. துளசி செடிக்கு பிருந்தா என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. துளசி செடி எங்கு இருக்கிறதோ அந்த இடம் பிருந்தாவனம் என்று கூறப்படுகிறது. இதில் பெருமாள் வீற்றிருப்பதால் அந்த இடத்தில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். ஒரு வீட்டில் துளசி செடியை வைத்து அதற்கு தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட துளசி செடியுடன் விநாயகருக்கு உகந்த அருகம்புல்லை வைத்து நாம் வளர்க்க வேண்டும். விநாயகப் பெருமான் அசுரரை வதம் செய்த பிறகு விநாயக பெருமானுக்கு உடல் உஷ்ணம் ஏற்பட்டது. அப்பொழுது முனிவர்கள் அனைவரும் அவரின் உஷ்ணத்தை தணிப்பதற்காக அருகம்புல்லை அவருடைய தலையில் வைத்தார்கள். அதன் மூலம் அவர் குளிர்ச்சி அடைந்து பழைய நிலைக்கு வந்தார். அதனால் தான் இன்றும் நாம் விநாயகர் பெருமானுக்கு அருகம்புல்லை வைத்த அர்ச்சனை செய்கிறோம்.

- Advertisement -

அருகம்புல்லை வைத்து அர்ச்சனை செய்யும் பொழுது அவரின் மனம் குளிர்ந்து நம் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அருகம்புல்லை துளசி செடியுடன் சேர்த்து வைத்து நாம் வளர்க்கும் பொழுது விநாயகப் பெருமான் மற்றும் மகாலட்சுமி அருளை நம்மால் பெற முடியும். எளிதில் சொல்ல வேண்டும் என்றால் செல்வ கணபதியின் அருளை நம்மால் பெற முடியும். இப்படி நாம் வைத்து வளர்க்கும் இந்த துளசி மற்றும் அருகம்புல் செடிக்கு என்று வழிபாட்டு முறை இருக்கிறது.

இந்த வழிபாட்டை நாம் தினமும் செய்ய வேண்டும். இதற்கு நெல் மற்றும் கஸ்தூரி மஞ்சள் வேண்டும். நெல்லுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து கொண்டு துளசி செடி மற்றும் அருகம்புல் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு மகாலட்சுமியின் மந்திரத்தையும், விநாயகப் பெருமானின் மந்திரத்தையும் 108 முறை கூறி அந்த மஞ்சள் நெல்லால் துளசி மற்றும் அருகம்புல்லுக்கு நாம் அர்ச்சனை செய்யும் பொழுது இவர்கள் இருவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள் அனைத்தும் விலகி செல்வ செழிப்புடன் நம்மால் வாழ முடியும்.

- Advertisement -

ஓம் ஐம் வசுதே வசுதாரி தன ஹரி தான்ய ஹரி ரத்ன ஹரி ஸ்வாஹா
ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தவிடு பொடியாக்கும் தவிடு பரிகாரம்

இந்த இரண்டு மந்திரங்களையும் தனித்தனியாக 108 முறை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். பல மருத்துவ குணம் கொண்ட இந்த மூலிகைகளை நாம் மனதார நம்பி வழிபாடு செய்ய நம்முடைய செல்வ நிலை உயரும். நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -