- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

கஷ்டங்களை தவிடு பொடியாக்கும் தவிடு பரிகாரம்

நம்முடைய வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி தான் வரும். ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒரு சிலரது வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே அதிக அளவு அனுபவித்து கொண்டு இருப்பார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள்தான் முக்கியமான காரணமாக திகழ்கிறது. கிரக தோஷமாக இருந்தாலும் சரி, முன்னோர்களால் ஏற்பட்ட சாபமாக இருந்தாலும் சரி, கண் திருஷ்டியாக இருந்தாலும் சரி, செய்வினை கோளாறுகளாக இருந்தாலும் சரி இவை அனைத்துமே நம்மை சுற்றி ஒரு எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.

இந்த எதிர்மறை ஆற்றலால் தான் நமக்கு துன்பங்கள் என்பது ஏற்படும். நம்மை சுற்றி மட்டுமல்லாமல் நம்மிடமும் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தி நல்லதை செய்ய முடியாமல் திரும்பத் திரும்ப கெடுதலையே செய்து அதனால் நாமும் கெட்டுவிடுவோம். இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

சோகம், கஷ்டம் திற எலிய பரிஹாரம்

இந்த பரிகாரத்தை நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை வீட்டிலும் செய்யலாம், தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட்டு அந்த இடத்தில் நாம் இருக்கக் கூடாது வெளியே சென்று விட வேண்டும். குறைந்தது மூன்று மணி நேரமாவது அந்த இடத்தில் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முழு நாளும் இல்லாமல் இருந்தாலும் நல்லது.

வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் வரவேற்பறையில் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொழிலாக இருக்கும் பட்சத்தில் தொழில் செய்யும் இடத்தில் மையப் பகுதியில் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு தாம்பாலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளம் நிறைய தவிடை கொட்டிக் கொள்ளுங்கள். நாட்டு மருந்து கடைகளில் தவிடு கிடைக்கும். இதற்கு மேலே கருப்பு புள்ளிகள் இல்லாத நல்ல பழுத்த எலுமிச்சம் பழமாக பார்த்து அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் எலுமிச்சம் பழமாக பார்த்து ஐந்து எலுமிச்சம் பழங்களை வாங்கி சரிசமமாக நறுக்கி தவிட்டின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த எலுமிச்சம் பழங்களுக்கு மேல் மிளகாய் தூளை தூவ வேண்டும். அடுத்ததாக அதற்கு மேல் மிளகுத்தூளை துவ வேண்டும். மிளகை முழுதாகவும் போடலாம். அது நம்முடைய விருப்பம். இப்படி போட்டு விட்டு இதை ஒரு பாத்திரத்தைக் கொண்டு மூடி வைத்து விட வேண்டும். இப்படி மூடி வைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே கிளம்பி விடுங்கள். 3 மணி நேரம் கழித்தோ அல்லது மாலையிலோ திரும்ப வந்து இதை அப்படியே எடுத்துக் கொண்டு போய் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதில் கற்பூரம், பேப்பர் போன்றவற்றை சேர்த்து இதில் இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் எரியும்படி எரித்து விட வேண்டும். இவ்வாறு எரிக்கும் பொழுது வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவரும் இதை சுற்றி இருக்க வேண்டும். முழுவதும் எரிந்து முடித்த பிறகு வீட்டிற்கு வந்து அனைவரும் முகம் கை கால்களை கழுவி விட்டு வீட்டை துடைத்து, வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மிடமும் நம் வீட்டிலும் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகி ஓடியே விடும். இதே முறையில் தான் தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க பௌர்ணமி பரிகாரம்

இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் செய்தோம் என்றால் நம்முடைய வீட்டிலும் நம்மிடமும் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கி அதனால் ஏற்பட்ட கஷ்டங்களும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.

- Advertisement -