- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சூரிய பகவான் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் செய்ய வேண்டியது

கிரகங்களில் தலைமை கிரகம் ஆக கருதப்படுவது சூரிய பகவான். ஆகையால் தான் நம்முடைய வழிபாட்டு முறைகளில் எல்லா வழிபாடுகளிலும் சூரிய பகவானை வணங்கும் முறை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி தினமும் சூரிய பகவானை வணங்கும் முறையும் இன்றளவும் கடைப்பிடித்து வருகிறோம். இந்த சூரிய பகவானானவர் மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றக் கூடியவர்.

ஆகையால் தான் மாதத்தின் முதல் நாளில் கூட நாம் சில வழிபாடுகளில் மூலம் சூரிய பகவானை வணங்குகிறோம். இத்தகைய ஆற்றல் பெற்ற சூரிய பகவானின் அருளானது நம் குடும்பத்திற்கு கிடைத்தால் சகலவித ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதை பெறுவதற்கான ஒரு எளிய வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சூரிய பகவானின் அருளைப் பெற

வரும் மே 4 முதல் மே மாதம் 25 வரை அக்னி நட்சத்திரம் உள்ளது. இந்த நேரத்தில் சூரிய பகவான் உச்சத்தில் இருப்பார். அக்னி நட்சத்திரம் என்றாலே வெப்பம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த நேரத்தில் சூரிய பகவானை குளிர்விக்க நாம் பூஜை அறையில் செய்யக் கூடிய இந்த ஒரு பரிகாரம் நம்முடைய குடும்பத்திற்கு பலவிதமான நற்பலன்களை தேடி தரும்.

அது வேறு ஒன்றும் இல்லை தினமும் காலை ஒரு சொம்பு நிறைய சுத்தமான தண்ணீரை வைக்க வேண்டும். அதாவது நீங்கள் நான்காம் தேதி அன்று காலையிலே ஒரு சொம்பு தண்ணீரை வைத்து விடுங்கள். அதை ஐந்தாம் தேதி அன்று காலையில் எடுத்து வீடு முழுவதும் தெளித்து விட்டு வாசலிலும் அந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். இப்படியாக 25 நாளும் முதல் நாளில் வைக்கும் தண்ணீரை மறுநாள் வீடு வாசல் தெளிக்க பயன்படுத்துங்கள்.

- Advertisement -

இந்த சொம்பு வைத்து வணங்கும் போதும் வீட்டில் தண்ணீரை தெளிக்கும் போதும் சூரிய பகவானின் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். சூரிய பகவான் தான் ஒவ்வொருவருடைய வேலை வருமானம் போன்றவற்றிற்கெல்லாம் முக்கிய காரணமாக அமைகிறார். அவருடைய அருளாசி நம் குடும்பத்திற்கு கிடைத்து விட்டால் போதும் வருமானத்திற்கு தடையில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ அருள் நிறைந்திருக்க

இந்த ஒரு எளிய பரிகார முறையில் நம்பிக்கை உடன் செய்த நிச்சயம் நல்ல பலனை பெறலாம் என்று நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -