- Advertisement -

நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நமக்கு பிரச்சினைகளும் கஷ்டங்களும் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளும் கஷ்டங்களும் தீர வேண்டும் என்றால் நம்முடைய கர்ம வினைகளை நாம் குறைக்க வேண்டும். கர்ம வினைகளை குறைக்க வேண்டும் என்றால் அதற்குரிய வழிப்பாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் செய்வதோடு தான தர்மங்களில் ஈடுபட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோவிலுக்கு கொடுக்க வேண்டிய தானம்

பொதுவாக ஆலயங்களில் பல தான தர்மங்கள் நடைபெறும். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் இருக்கும். அந்த பலன்களுக்கு ஏற்றவாறு நாம் அந்த தானத்தை மேற்கொள்ளலாம். நம்முடைய பிரச்சனை என்னவோ அந்த பிரச்சனைக்கு ஏற்றவாறு எந்த கிழமையில் எந்த கோவிலில் எந்த தானத்தை செய்ய வேண்டும் என்று ஜோதிட ரீதியாக பலரும் ஆராய்ந்து கூறுவார்கள். அதன்படியும் நடந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாழ்க்கையே இருண்டு விட்டது. வேறு வழியே இல்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்கள் கூட தங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று நினைத்தால் கோவிலுக்கு தீபம் ஏற்றுவதற்காக நெய் வாங்கி தர வேண்டும். இந்த நெய்யானது சுத்தமான பசு நெய்யாக இருந்தால் தான் அதன் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும். தொடர்ந்து 48 நாட்கள் ஆலயத்தில் இருக்கக்கூடிய சுவாமி சன்னதியில் நாம் வாங்கி கொடுத்த நெய் தீபம் எரிய வேண்டும்.

அந்த அளவிற்கு நாம் நெய்யை கஷ்டப்பட்டாவது சுத்தமான நெய்யாக பார்த்து வாங்கி கொடுத்தோம் என்றால் எப்படி அந்த இருட்டிலும் தீபத்தின் ஒளி பிரகாசமாக எரிந்து சுவாமியின் முகம் தெரிகிறதோ அதே போல் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய இருளையும் நீக்கி பிரகாசமான எதிர்காலத்தை காட்டுவார். கடைகளில் இருந்து ஏதாவது ஒரு நெய்யை வாங்கிக் கொடுத்தால் இந்த பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைக்காமல் சுத்தமான பசும்பாலில் இருந்து தயார் செய்யக்கூடிய பசு நெய்யை வாங்கித் தர வேண்டும்.

- Advertisement -

சிறிது சிரமம் தான் என்றாலும் தேடிப் பார்த்தால் கண்டிப்பான முறையில் கிடைக்கும். இப்படி வாங்கிய நெய்யை அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அது எந்த ஆலயமாக இருந்தாலும் சிவன், முருகன், பிள்ளையார், அம்மன், பெருமாள் என்று எந்த தெய்வத்தின் கோவிலாக இருந்தாலும் சரி அந்த கோவிலில் மூலஸ்தானத்தில் இந்த நெய்யை பயன்படுத்தி தீபம் ஏற்றுமாறு அச்சகரியிடம் கூற வேண்டும். இப்படி மூலஸ்தானத்தில் ஏற்றக்கூடிய தீபத்திற்குரிய பலன் என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும்.

ஒரு வேலை நெய்யை வாங்கி கொடுக்க இயலவில்லை. சுத்தமான நெய் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் மூலஸ்தானத்தில் வெளிச்சம் வருவதற்கு உதவக்கூடிய வேறு ஏதாவது பொருட்களை வாங்கித் தரலாம். விளக்கு வாங்கி கொடுத்து மூலஸ்தானத்தில் மாட்டி வைப்பதோ அல்லது மூலஸ்தானத்தில் எரியக்கூடிய லைட்டை வாங்கி கொடுப்பது என்று வெளிச்சம் ஏற்படும் வகையில் மூலஸ்தானத்திற்கு தேவையான ஏதாவது ஒரு பொருளை வாங்கி தருவதன் மூலம் மூலஸ்தானம் எந்த அளவுக்கு பிரகாசமாக இருக்கிறதோ அதேபோல் நம்முடைய எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற சிதறு தேங்காய் பரிகாரம்

மிகவும் சக்தி வாய்ந்த இந்த தானத்தை இயன்ற அளவு செய்து அதற்குரிய பலனை முழுமையாகப் பெற்று சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -