- Advertisement -
வீட்டு குறிப்புகள்

அயன் பாக்சில் கருப்பாக கறை படிந்து நீண்ட நாட்களாக அப்படியே உள்ளதா? இப்படி செய்தால் போதும் 5 நிமிடத்தில் மொத்த கறையும் நீங்கி அயன் பாக்ஸ் புதிது போல மாறி விடும்.

- Advertisement -

இன்று வேலைக்கு செல்லும் அனைவரது வீடுகளிலும் நிச்சயம் அயன் பாக்ஸ் இருக்கும். ஆனால் சில காலத்திற்கு பிறகு அந்த அயன் பாக்சின் அடிப்புறத்தில் கருப்பு நிறத்தில் கறை படியதுவங்கும். இதற்க்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் அயன் செய்யும் போது தவறுதலாக துணிகளை கருக வைப்பது, அதிகமான சூட்டில் துணிகளை தேய்ப்பது இப்படி பல காரணங்கள் இருக்கின்றனர். இப்படி அழுக்கு படிந்த அயன் பாக்சை கொண்டு நாம் வெள்ளை துணிகளை அயன் செய்யும்போது அந்த அழுக்கு வெள்ளை துணிகளில் படியவும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த அயன் பாக்சில் உள்ள அழுக்கை எப்படி சுலபமாக நீக்குவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

அயன் பாக்ஸ் கறை நீங்க:
பொதுவாக சிலர் பிளேடை கொண்டு அயன் பாக்சில் உள்ள அழுக்கை சுரண்டுவது வழக்கம். ஆனால் அப்படி செய்வதன் மூலம் அயன் பாக்சில் கீறல்கள் விழும். ஆகையால் அப்படி செய்வதை தவிர்ப்பது நல்லது. அதற்க்கு பதிலாக அயன் பாக்சிற்க்கு எந்த விதமான சேதமும் இல்லாமல் வெறும் பேராசிட்டாமல் மாத்திரைகளை கொண்டே இந்த கறையை நாம் போக்க முடியும்.

- Advertisement -

முதலில் ஒரு பேராசிட்டாமல் மாத்திரை அட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அது காலாவதி ஆகி இருந்தாலும் பரவாயில்லை. அந்த அட்டையில் இருந்து 7 முதல் 8 மாத்திரைகளை எடுத்துக்கொண்டு பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பிறகு அயன் பாக்ஸை மேக்ஸிமம் சூட்டில் அட்ஜஸ்ட் செய்துவிட்டு அதை மல்லாக்க வைத்துவிடுங்கள்.

பிறகு அயன் பாக்சை ஆன் செய்து, கறை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் நாம் பொடி செய்து வைத்துள்ள மாத்திரையை பரப்பி விடவேண்டும். சிறிது நேரம் அப்படியே விட்டால் மாத்திரை பொடியின் நிறம் மாற அராமிக்கும். இது அப்படியே இருக்கையில் ஒரு கட்டை மீது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பை பரப்பி வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அயன் பாக்சை எடுத்து அந்த உப்பின் மீது வைத்து தேய்க்க வேண்டும். நாம் இப்படி தேய்க்கும்போது அயன் பாக்சில் உள்ள கறை முழுவதும் உப்பில் ஒட்டிக்கொள்ளும். இப்படி செய்த பிறகு ஒரு துணியை எடுத்து சற்று அழுத்தமாக அயன் பாக்சின் அடிபுரத்தை துடைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் 95% கறை நீங்கிவிடும்.

மீதம் இருக்கும் கறையை போக்குவதற்கு, முழுமையான பேராசிட்டாமல் மாத்திரையை எடுத்து அதை கறை உள்ள இடங்களில் தேய்த்தால் போதும். கறை அப்படியே உருக ஆரமிக்கும். அதை ஒரு துணி கொண்டு துடைத்து எடுத்துவிடலாம். அவ்வளவு தான் அயன் பாக்சில் உள்ள கறைகள் முழுவதும் நீங்கிவிடும். நாம் இவற்றை செய்து முடிக்கும் வரை அயன் பாக்ஸ் ஆனில் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிட தக்கது. அதே சமயம் கையில் எங்கும் சூடு வைத்துக்கொள்ளாத அளவிற்கு இதை ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அட ! ஹார்பிக்கை வைச்சி இதெல்லாம் கூட சுத்தம் பண்ணலாம்னு இது வரைக்கும் தெரியாம போச்சே.

அயன் பாக்சில் வெறும் சில இடங்களில் மட்டும் தான் கறை உள்ளது என்றால், மேலே சொன்ன அனைத்தையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. வெறும் மாத்திரையை கொண்டு தேய்த்தால் மட்டும் போதுமானது. கறை அப்படியே வந்துவிடும். அதை துணியை கொண்டு துடைத்துவிடலாம்.

- Advertisement -