
தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாத பிறப்பும் மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது தான் மாதத்தின் முதல் நாள். அதிலும் ஆவணி மாதத்தின் முதல் நாள் என்பது மகாவிஷ்ணுவின் அருளை பெறுவதற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது. அதோடு இது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வருவதால் சூரிய பகவானை வழிபாடு செய்வதற்கு மிகுந்த சிறப்பு மிகுந்த நாளாகவும் திகழ்கிறது. இப்படிப்பட்ட நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் அது பல மடங்கு பலனை நமக்குத் தரும். அந்த வகையில் ஆவணி முதல் நாள் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு மாதப்பிறப்பும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. அதிலும் மாதப்பிறப்பு ஞாயிற்றுக்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பை தரும். இந்த நாளில் நாம் எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் அந்த பரிகாரம் ஒரு முறை செய்தால் பலமுறை செய்ததற்கு சமமாக கருதப்படுகிறது. அதேபோல்தான் இன்றைய தினம் நாம் செய்யக்கூடிய வழிபாடும் பலமுறை வழிபாடு செய்வதற்குரிய பலனை தரும் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் வழிபாட்டு முறைகளையும், தான தர்மங்களையும் செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கர்ம வினைகள் விரைவில் குறையும்.
இன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு நவக்கிரகங்களில் உள்ள சூரிய பகவானுக்கு அல்லது தனி சன்னதியில் இருக்கக்கூடிய சூரிய பகவானுக்கு முன்பாக கோதுமையை வைக்க வேண்டும். பிறகு 12 அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு சூரிய பகவானை 108 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வேலையில் நல்ல முன்னேற்றமும், அரசாங்கம் தொடர்பான அனைத்து செயல்களில் வெற்றியும், வாழ்க்கையில் ஐஸ்வர்யமும் கிடைக்கும்.
இதோடு மட்டுமல்லாமல் இன்றைய தினம் நாம் செய்யக்கூடிய சிறப்பு மிகுந்த தானமாக ஒரு தானம் திகழ்கிறது. அதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய ஜாக்கெட் துணி, வேஷ்டி, துண்டு என்று ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். இதனுடன் 1 1/4 கிலோ கோதுமையையும் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு வெற்றிலை பாக்கு, சிவப்பு நிற பழங்கள், சிவப்பு நிற மலர்கள் இதோடு நம்மால் இயன்ற அளவு தட்சனையும் வைத்து கோவிலில் இருக்கக்கூடிய குருக்களுக்கு தானமாக தருவதன் மூலம் அந்த தானத்தின் பலனை நம்மால் பல மடங்கு பெற முடியும்.
மேலும் இன்றைய தினத்தில் நாம் வீட்டிலோ ஆலயத்திலோ செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிகளவு பலன் கிடைக்கும் என்றும் மிகவும் சிறப்பான பாடல்களாக கருதக்கூடிய கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற பக்தி பாடல்களை பாராயணம் செய்வதும் அதே சமயம் நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு வேண்டுதலை நிறைவேற்றாமல் இருக்கும் பட்சத்தில் அந்த வேண்டுதலை செய்வதும் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே: ஆவணி ஒன்று விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு
அதிசக்தி வாய்ந்த ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய ஆவணி முதல் நாள் இந்த முறையில் ஏதாவது ஒன்றையாவது பின்பற்றி அதிக அளவு பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.