- Advertisement -

ஜூன் முதல் நாள் வாங்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

ஒரு மாதத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அடுத்து வரும் மாதத்தில் மறைந்து நன்மைகள் உண்டாகவும், மகிழ்ச்சிகள் அதிகரிக்கவும் பலவிதமான வழிப்பாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நாம் மேற்கொள்வோம். அந்த வகையில் சூட்சுமண பரிகாரமாக திகழ்வதுதான் மாத தொடக்கத்தில் வாங்க வேண்டிய பொருட்கள். அப்படிப்பட்ட பொருட்களை மாதத்தின் முதல் நாளன்று நாம் வாங்கினோம் என்றால் நம் வீட்டில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறைவும் இருக்காது என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஜூன் மாதத்தின் முதல் நாள் வாங்க வேண்டிய பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் என்பது இருக்கும். நம்முடைய ஜாதக ரீதியாகவும் அந்த பலன்கள் மாறுபடும். இருப்பினும் பொதுவான பலன்கள் என்று சில பலன்கள் இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் நாம் தெய்வீக ஆற்றல் மிகுந்த பொருட்களை நம்முடைய வீட்டிற்கு வாங்கி வருவதன் மூலம் ஏதேனும் அசுப பலன்கள் இருக்கும் பட்சத்தில் அவை மாறி சுப பலன்களாக மாறும். அதன் அடிப்படையில் ஜூன் மாதத்தில் நாம் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான சுபக்காரியங்களில் ஈடுபடுவோம். அந்த சுப காரியங்களில் ஏதேனும் தடைகள் இருக்கும் பட்சத்தில் ஜூன் மாதத்தில் அந்த தடைகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், சுப காரியங்கள் விரைவில் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்களும் ஜூன் மாதம் முதல் நாள் மஞ்சள் குங்குமத்தை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.

இதோடு சேர்த்து செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரே ஒரு மாதுளம் பழத்தை வாங்கி வந்து அதன் முத்துக்களை தனியாக எடுத்து அதில் லேசாக தேனை ஊற்றி மகாலட்சுமி அல்லது வராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய செல்வ செழிப்பு உயரும். இதே போல் ஏதாவது ஒரு இனிப்பை வாங்கி வர வேண்டும். அது சமையலுக்கு உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களாக இருந்தாலும் சரி அல்லது லட்டு, ஜிலேபி போன்ற இனிப்பு வகைகளாக இருந்தாலும் சிறிதளவாவது வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட ஜூன் மாதம் முழுவதும் இனிப்பான செய்திகள் நம்மை வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நாம் நம்முடைய வீட்டு உபயோகத்திற்காக சிறிதளவாவது ஜூன் மாதத்தின் முதல் நாள் அரிசி வாங்க வேண்டும். எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை சிறிதளவு மட்டும் நாம் வாங்கி வந்து வீட்டில் வைக்க நம்முடைய வீட்டில் தன தானியத்திற்கு எந்த வித குறையும் வராது, தானியலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற முடியும். ஜூன் மாதத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று பிறக்கிறது என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானுக்குரிய கிழமை என்பதாலும் சூரிய பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் நம்மை வந்து சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் சூரிய பகவானுக்குரிய தானியமான கோதுமையை வீட்டில் வாங்கி வைத்து வழிபடுவது சிறப்பான பலனை தரும்.

இதையும் படிக்கலாமே:பசுவிற்கு அகத்தி தானம்

மேல் குறிப்பிட்ட பொருட்களுள் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமே ஜூன் மாதத்தின் முதல் நாளன்று வாங்கி வைத்து வழிபாடு செய்ய அனைத்து விதமான நன்மைகளும் நன்மை தேடி வரும். ஜூன் மாதம் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய மாதமாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -