
“கருப்பு” காக்கும் நிறமாக இந்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. காத்து கருப்பு, துஷ்ட சக்திகள் எதுவும் நம்மை அண்டாமல் இருக்க கருப்பு கயிறு அணியும் முறை புழக்கத்தில் வந்தது. தெய்வீக சக்தியை உள்வாங்க கூடியது கருப்பு கயிறு. கருப்பு கயிறு எப்பொழுதும் நம் உடம்பில் இருப்பது, ஆத்ம பலத்தை கொடுக்கக்கூடும். இந்த கருப்பு கயிறு காலில் அணிவது சரியா? யாரெல்லாம் காலில் அணியலாம்? காலில் அணியக் கூடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த சுவாரசியமான தகவல்களை தான் இந்த பதிவில் அறிந்து கொள்ளப் போகிறோம்.
ஆத்ம பலத்தை கொடுக்கக் கூடியது இந்த கருப்பு கயிறு. குழந்தை பிறந்து பிறந்த தீட்டு கழித்த நாள் முதல், ஒரு மனிதன் இறக்கும் வரை உடம்பில் கருப்பு கயிறு இருக்கலாம். கருப்பு கயிறு பொதுவாக மணிக்கட்டு மற்றும் இடுப்பு பகுதியில் கட்டுவது பாரம்பரிய வழக்கம். முன்பெல்லாம் யாரும் காலில் கருப்பு கயிறு கட்டியதில்லை. கருப்பு கயிறு காலில் அணிவதால் மனிதர்களுக்கு புலனடக்கம் உண்டாகிறது.
வேலைக்கு செல்லும் பெண்கள், வெளி உலகத்தை பார்த்தாலே சிலருக்கு ஒரு விதமான பயம் ஏற்படும், இது போன்ற பெண்கள் கருப்பு கயிறு இடது காலில் அணியலாம். குழந்தைகளுக்கு காலில் கருப்பு கயிறு கட்டுவதால் பயனில்லை. ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்ட வேண்டும். கருப்பு கயிறு ஒன்பது முடிச்சுகள் போட்டு தெய்வத்திடம் வைத்து பிரார்த்தனை செய்து கொண்டு கட்டிக் கொள்ளுங்கள்.
இடுப்பில் கருப்பு கயிறு கட்டுவதால், திருஷ்டி தோஷங்கள் அண்டாமல் பாதுகாப்புடன் இருக்கலாம். இடுப்பில் கருப்பு கயிறு எப்போதும் அணிந்திருப்பவர்களுக்கு குடல் சார்ந்த பிரச்சினைகள் வருவதில்லை, குடலிறக்கம் போன்ற தொந்தரவுகளும் ஏற்படுவதில்லை. மணிக்கட்டு பகுதியில் கருப்பு கயிறு கட்டுபவர்கள், குலதெய்வ சக்தியை பெறுகிறார்கள். இவர்களிடம் தர்ம சிந்தனை அதிகரித்து அதர்ம வழியில் செல்லாமல் பாதுகாக்கும் அரணாக இக்கயிறு துணை நிற்கும்.
காலில் கயிறு அணிபவர்கள் தர்ம நெறியுடனும், நல்ல சிந்தனையுடனும் இல்லாவிட்டால், கயிறு கட்டுவதனால் எந்த விதமான பலன்களும் இல்லாமல் போய்விடும். கருப்பு கயிறு காலில் அணிபவர்கள், அதை முறையாக அணிவது நல்லது. பெண்கள் யாரும் முன்பெல்லாம் வெளியில் செல்வது கிடையாது, ஆனால் இப்பொழுது ஆண்களுக்கு இணையாக அனைவரும் வெளியில் செல்வதும், பலருடன் பழகுவதும் சகஜம் ஆகிவிட்டது, எனவே பெண்கள் இடது காலில் பிரார்த்தனை செய்து கொண்டு கருப்பு கயிறு அணிந்து கொள்வதால் ஐம்புலனடக்கம் ஏற்படுகிறது. திருமணம் ஆகாத பெண்கள் நெற்றியில் கருப்பு பொட்டு இரு புருவம் மத்திமத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
திருமணமான பெண்கள் அடர் சிகப்பு நிறத்தில் புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்ள அவ்விடத்தில் செல்லும் நரம்பானது உங்களுக்கு நேர்கொண்ட பார்வையை கொடுக்கும். ஆண்களுக்கு கருப்பு கயிறு வலது காலில் அணிவது ஐம்புலன் அடக்கத்தை கொடுக்கும். பிரார்த்தித்து ஒன்பது முடிச்சுகள் போட்டு கருப்பு கயிறு அணிய தீய எண்ணங்கள் ஏற்படாது. அதர்ம வழியில் செல்ல வேண்டும் என்னும் நினைப்பும் வராது. எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன்னர் எதற்காக செய்கிறோமோ, அந்த நிலையை அடைவதில் உறுதியாக இருக்க வேண்டும். அது போல கருப்பு கயிறு அணிபவர்கள் தர்ம நெறியில் இருந்து தவறாது இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அணிந்து கொள்ளுங்கள், நன்மைகள் நடக்கும்.