- Advertisement -
ஜோதிடம்

ஒருவரின் கால் விரல்களின் அமைப்பை வைத்து அவரின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள முடியும். இதனால் அவரின் குணநலன்களை புரிந்து அவருடன் எளிதாக பழக முடியும்

வேலையில் பணிமாற்றம் கிடைத்தாலோ அல்லது திருமணமாகி வேறு ஊருக்கு சென்றாலோ இப்படி ஒவ்வொரு காலகட்டத்தில் நாம் நம்மை அறியாதவர்களிடம் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த நேரங்களில் ஒருவருடன் பழகுவதற்கு சற்று தயக்கமாக இருக்கும். அவரைப் பற்றி எதுவுமே தெரியாது. அவரின் குண நலன்கள் பற்றியும் நமக்கு புரியாது. அவர் நல்லவரா? கெட்டவரா? அவர்களுக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? எப்படி அவர்களிடம் பேச வேண்டும்? என்ற பல குழப்பங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் ஒருவரை பார்த்த உடனே அவரைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்தால் அது சந்தோஷமாகத்தானே இருக்கும். அப்படி ஒரு சுவாரசியமான விஷயத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு சில பெரியவர்கள் மற்றவர்களின் கால் விரலின் அமைப்பைப் பார்த்து இவள் அடங்காதவள், திருமணமாகி கணவனை தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவாள், இவன் கோபக்காரன், இவன் மிகவும் அமைதியானவர் என்று பலவித கருத்துக்களை சொல்வதை நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம். இது உண்மையா? பொய்யா? என்று நமக்கு தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் இப்படி கால் விரலை வைத்து கூறப்படும் ஒருவரின் குணநலன்கள் அவர்களுக்கு ஒத்துப் போவதாகவே இருக்கின்றது.

- Advertisement -

அப்படி ஒருவரின் கால் விரல் கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள இரு விரல்கள் சமமான உயரத்திலும், மற்ற இரண்டு விரல்கள் ஒன்றுக்குப் பின் முரணாகவும் இருந்தால் அவர்கள் பலவித கலாச்சாரங்களை விரும்பும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். பல நாட்டின் கலாச்சார விதிமுறைகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். பல நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பதற்கு ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். பலரும் பயப்படக்கூடிய சாகசங்களை பயப்படாமல் செய்யத் துணிந்தவர்களாகவும் இருப்பார்கள்.

அடுத்ததாக சுண்டு விரலில் இருந்து கட்டை விரல் வரை ஏறுமுகமான வரிசையில் விரல்கள் அமைந்திருப்பவர்கள் அனைவரிடமும் மிகவும் நட்பாக பழகுவார்கள். எந்தவித பாகுபாடும் இல்லாமல் மற்றவர்களை அலட்சியப்படுத்தாமல் இயல்பாக பழகுவார்கள். தன்னுடன் இருப்பவர்கள் தன்னை எப்பொழுதும் கவனித்துக்கொள்ள வேண்டும், தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மிகவும் இறுக்கமானவர்களுடனும் கூட இவர்கள் எளிதில் பேசி பழகி விடுவார்கள். இயற்கையை ரசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

- Advertisement -

கட்டை விரலுக்கு பக்கத்து விரல் பெரியதாகவும், அதன் பக்கத்து விரல் சிறியதாகவும், அதனைத் தொடர்ந்து இரு விரல்கள் சமமாகவும் இருந்தால் இவர்கள் இயற்கையாகவே சுகவாசியாக இருப்பார்கள். நன்றாக சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.

கட்டை விரலுக்கு பக்கத்து விரல் பெரியதாகவும் மற்ற அனைத்து விரல்களும் இறங்குமுகமாக இருப்பவர்க மிகவும் சுறுசுறுப்பாக துறுதுறுவென்று இருப்பார்கள் இதனாலேயே எளிதில் சோர்வடைந்து விடுவார்கள் ஒரு கூட்டத்தில் தன்னை மட்டுமே மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்வார்கள் பொதுவாகவே இவர்கள் பேச்சுத் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள் எந்த ஒரு முடிவையும் இவர்கள் 100% துள்ளியமாக எடுக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்

இறுதியாக கட்டைவிரல் முதல் மற்ற அனைத்து விரல்களும் சமமாக இருக்கும், ஒரு சிலருக்கு கட்டைவிரல் சற்று பெரியதாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் கூர்மையான புத்தி கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுப்பார்கள். எப்பொழுதும் நேர்மையாக இருப்பார்கள்.

- Advertisement -