
இந்த உலகத்தின் நலனுக்காக தவமிருந்து பூமியில் அவதரித்தவள் காமாட்சி அம்மன். நம்முடைய கஷ்டங்களை எல்லாம் தீர்க்கக்கூடிய தாய் இந்த காமாட்சி அம்மன். எந்த ஒரு வீட்டில் தினமும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றி வழிபாடு மேற்கொள்கிறார்களோ, அந்த வீட்டில் கஷ்டத்திற்கு இடமே கிடையாது.
இதன் அடிப்படையில் உங்களுடைய பணக்கஷ்டம் தீர, மனக்கஷ்டம் தீர, வருமானம் பெறுக, வருமானத்திற்கு உண்டான வழிகளை பெறுவதற்கு ஒரு காமாட்சி அம்மன் வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கூடவே சக்தி வாய்ந்த காமாட்சியம்மன் மந்திரத்தையும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தலைபோகும் எவ்வளவு பெரிய வேலை இருந்தாலும் சரி, தினசரி வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குடும்பம் சிறக்க பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இப்போது நிறைய பேர் வீடுகளில் கஜலட்சுமி விளக்கு தான் இருக்கிறது. பரவாயில்லை. அந்த விளக்கை ஏற்றி காமாட்சி அம்மனை மனதில் நினைத்து பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னாலும் சிறப்பு. நேரம் இருப்பவர்கள் 3 முறை, 27 முறை, 108 முறை கூட சொல்லலாம். தவறு கிடையாது. தினமும் வீட்டில் உச்சரிக்க வேண்டிய காமாட்சி அம்மன் மந்திரம் இதோ உங்களுக்காக
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் காமாக்ஷி
தேவ்யை சித்தி தாத்ரே நமஹ !
வெறும் இரண்டே வரி மந்திரம் தான். இந்த மந்திரத்தை சொல்லுவது சிறப்பு. தினமும் சொல்ல முடியவில்லை, வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை மட்டுமாவது வீட்டில் விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்களுக்கு இன்னும் கூடுதல் நேரம் இருக்கிறது சில பரிகாரங்கள் சேர்த்து செய்ய முடியும் என்றால், பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். நீங்கள் உங்கள் நிலை வாசலுக்கு வெளிப்பக்கம் சென்று விடுங்கள். நிலை வாசலை பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள்.
உங்களுடைய கையில் கொஞ்சமாக பட்டை பொடி வைத்துக் கொள்ள வேண்டும். பிரியாணி பட்டை இருக்கிறதல்லவா. அதை நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, நிலை வாசலுக்கு உள்பக்கம் பார்த்தவாறு ஊதிவிட வேண்டும். நீங்கள் நிலை வாசல் படியை தாண்டி வெளியில் நிற்கிறீர்கள். நிலை வாசல் உள்ளே பார்த்தவாறு நிற்கிறீர்கள்.
அந்த பட்டை பொடியை ஊதி விடும்போது, நிலை வாசலுக்கு உள்பக்கம் அந்த பட்டை பொடியானது எப்படி பறந்து வருகிறது, அதேபோல செல்வ செழிப்பு உங்கள் வீட்டிற்குள் பறந்து வரும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமி உங்கள் வீட்டை தேடி ஓடி வந்து விடுவார்கள். இந்த பட்டை பொடியை ஊதிவிட்டு மேலே சொல்லப்பட்டு இருக்கும் காமாட்சி அம்மன் மந்திரத்தை நிலை வாசலில் நின்ற படியே மூன்று முறை உச்சரிப்பது மிக மிக சிறப்பு.
இதையும் படிக்கலாமே: 4-09-2024 மூன்றாம் பிறை தரிசன மந்திரம்.
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையிலும், மாதம் தோறும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் இதை செய்பவர்களுக்கு கட்டாயம் வீட்டில் பணக்கஷ்டம் இருக்கவே இருக்காது நிதர்சனமான உண்மை. 3 மாதம் பௌர்ணமி திதி நினைவு வைத்துக் கொண்டு, இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.