- Advertisement -
சமையல் குறிப்புகள்

வாவ்! சீரக சம்பா அரிசியில இப்படி கூட ஒரு பிரியாணி செய்ய முடியுமா? வேற லெவல் டேஸ்ல கர்நாடகா பிரியாணி ரெசிபி.

- Advertisement -

இப்படி ஒரு பிரியாணியை நிச்சயமாக நம் வீட்டில் செய்திருக்க மாட்டோம். முற்றிலும் வித்தியாசமான ஒரு குறிப்பு இது. கர்நாடகாவில் இந்த பிரியாணி ரெசிபி மிகவும் பிரபல்யம். நீங்க ஒரே ஒருமுறை இந்த டைப்ல பிரியாணி செஞ்சு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பிரியாணி வேகும்போதே இதன் வாசம் நம் மூக்கை துளைக்கும். பசியை தூண்டும். சூப்பரான இந்த ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க. ரெசிபியை சட்டுன்னு பார்த்திடலாம் வாங்க.

முதலில் 2 கப் அளவு சீராக சம்பா அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். சீரக சம்பா அரிசியை தவிர்த்து விட்டு, பாஸ்மதி அரிசியில் கூட இந்த பிரியாணியை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த குறிப்பில் நாம் பார்க்கப் போவது சீரக சம்பா அரிசி தான். 2 கப் அளவு சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அரிசி ஊறும் 20 நிமிடத்திற்குள் பிரியாணிக்கு தேவையானதை தயார் செய்து விடுவோம். ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் – 6, 1/2 கைப்பிடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, 1/2 கைப்பிடி பொடியாக நறுக்கிய புதினா இலைகளை, போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், பட்டை – 2, அன்னாசி பூ – 3, பிரியாணி இலை – 2, மிளகு – 1/2 ஸ்பூன், ஏலக்காய் – 2, கல்பாசி – சிறிதளவு, லவங்கம் – 2, போட்டு எண்ணெயில் இந்த மசாலா பொருட்களை எல்லாம் நன்றாக பொரிய விடுங்கள். பிறகு மிகவும் பொடியாக நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் சேர்த்து, ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதோடு சேர்த்து நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 2 ஸ்பூன், கரம் மசாலா – 2 ஸ்பூன், சேர்த்து இந்த மசாலா பொருட்களையும் இரண்டு வதக்கு வதக்கி விட்டு பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி ஒவ்வொரு கைப்பிடி அளவு எடுத்து இதில் போட்டுக் கொள்ள வேண்டும். (உருளைக்கிழங்கு நூல் கோல் போன்ற மற்ற காய்கறிகளையும் இதில் உங்கள் விருப்பம் போல சேர்க்கலாம்.)

இறுதியாக எல்லா பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். குக்கரில் செய்தால் 2 கப் அளவு அரிசிக்கு, 3 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். (குக்கரில் 1 கப் அரிசிக்கு, 1 1/2 கப் அளவு தண்ணீர். பாத்திரத்தில் செய்தால் 1 கப் அளவு அரிசிக்கு 2 கப் தண்ணீர் தேவைப்படும்.)

பிறகு தேவையான அளவு உப்பு போட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி நன்றாக கலந்து இந்த தண்ணீரை கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதி வந்ததும் ஊறிக் கொண்டிருக்கும் பாஸ்மதி அரிசியை தண்ணீரை வடித்து விட்டு இதில் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும் இதன் மேலே இரண்டு வாழை இலைகளை போட்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு அடுப்பை அணைத்து விட்டால் போதும். சூப்பரான ஒரு பிரியாணி தயார்.

பாத்திரத்தில் செய்தாலும் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதி வந்ததும் அதன் மேலே வாழை இலைகளை போட்டு மூடி, குண்டானுக்கு மேலே ஒரு தட்டு போட்டு மூடி, ஒரு கனமான கல்லை தட்டின் மேல் வைத்து 20 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்தால் சூப்பரான பிரியாணி தயாராகி இருக்கும். இந்த பிரியாணி வேற லெவல் டேஸ்ல இருக்குங்க. ஒரே ஒரு முறை நீங்க ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

- Advertisement -