
குபேரருக்கு செல்வ வலத்தை வாரி வழங்கியவர் அந்த ஐஸ்வரேஸ்வரர் தான். அந்த ஈசனை வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் வறுமையானது நீங்கும். அதிலும் வெளிச்சத்தை கொடுக்க கூடிய இந்த கார்த்திகை மாதம், அண்ணாமலையனுக்கு சொந்தமான மாதம். அடிமுடி தெரியாத ஈசன், திருவண்ணாமலையில் ஜோதிஸ்வரூபமாக அனைவருக்கும் காட்சி கொடுத்த மாதம் இது.
இந்த மாதத்தில் 30 நாளும் எவன் ஒருவன் ஈசனின் வழிபாட்டை மேற்கொள்கின்றானோ, அவனுடைய வாழ்க்கையில் வறுமை என்பது நிச்சயம் இருக்காது. எளிமையான முறையில் கார்த்திகை மாதம் சிவபெருமானை எப்படி வழிபாடு செய்வது.
உங்களால் கோவிலுக்கு செல்ல முடியும் என்றால், பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று 2 வில்வ இலைகளை, சிவபெருமான் தலையில் வைத்து மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, சிவன் கோவிலை 11 முறை வலம் வர வேண்டும். காலையோ மாலையோ உங்கள் சகோதரியும். எப்போது நேரம் கிடைக்கிறதோ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
நல்ல வேலை வேண்டுமா, இழந்த பணத்தை மீட்டெடுக்க வேண்டுமா, ஆரோக்கியம் வேண்டுமா, நல்ல வாழ்க்கைத் துணை தேவையா, நல்ல குழந்தை தேவையா, என்ன வரம் வேண்டுமோ இந்த 30 நாளும் ஒரே ஒரு வரத்தை ஈசனின் செவிகளில் சொல்லி வில்வ இலையை போட்டு 11 முறை அந்த கோவிலை வளம் வந்தால் நீங்கள் கேட்டது நிச்சயம் நடக்கும்.
சில பேருக்கு தினமும் கோவிலுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமையில் மட்டுமாவது ஈசனை போய் தரிசனம் செய்யுங்கள். கார்த்திகை மாதம் சோமவார வழிபாடு ரொம்ப ரொம்ப நல்லது. அதுவும் எங்களால் முடியாது எங்கள் வீட்டு பக்கத்தில் சிவன் கோவிலில் இல்லை நாங்கள் என்ன செய்வது. தினமும் ‘மந்திரமாவது நீறு’ என்ற வார்த்தையை சொல்லி அந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசுங்கள் பூஜை அறையைத் திறங்கள் ஈசனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ஓம்
இந்த மந்திரத்தை எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை வாய் விட்டு சொல்லுங்கள். ஈசனை வணங்கி விட்டு, உங்களுடைய அன்றாட வேலையை துவங்குங்கள். அவ்வளவுதான். சிவ சிவ நாமம் உங்கள் வாயால், இந்த கார்த்திகை மாதம் முழுவதும் தினம் தோறும் உச்சரிக்கப்பட வேண்டும். சிவ மந்திரத்தை சொல்லச் சொல்ல அந்த ஈசனின் நெருக்கம் உங்களுக்குள் அதிகரிக்கும்.
பிறகு நீங்கள் வேண்டியது எல்லாம் கஷ்டப்படாமல் ஈசனிடமிருந்து வரமாக பெறக்கூடிய பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும். அந்த பாக்கியத்தை தரக்கூடிய சக்தி, இந்த கார்த்திகை மாதத்திற்கு இருக்கிறது. கார்த்திகை மாதம் எவன் ஒருவன் ஈசனை நெருங்க விரும்புகின்றானோ, அவன் சீக்கிரமாக ஈசனுடைய பாதங்களை சரணடையலாம். கார்த்திகை மாதம் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஈசனை பார்ப்பதற்கு பூமிக்கு வருவதாக சாஸ்திரம் சொல்லுகிறது.
இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் தீர கார்த்திகை மாதம் ஏற்ற வேண்டிய விளக்கு
இதுபோல ஒரு சமயத்தில் நாமும் ஈசனை சென்று தரிசனம் செய்வது எத்தனை புண்ணியம். வார்த்தையால் இதை சொல்ல முடியாது. கார்த்திகை மாதம் சிவபெருமானை வழிபாடு செய்து வரம் பெற்றவர்களுக்கு மட்டுமே இது புரியும். கார்த்திகை மாதம் திருவண்ணாமலைக்கு சென்று சில பல அனுபவங்களை பார்ப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும். நீங்களும் இருந்த இடத்திலிருந்து சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுவதும் மனதார நினைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை நிச்சயம் மாறும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்