- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

கரும்புள்ளிகள் அற்ற அழகான முகத்தை பெற உதவும் வெந்தயம்

இளம் வயதினராக இருந்தாலும் முதுமை தோற்றத்தை அடைந்தவராக இருந்தாலும் தங்களின் முக அழகை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நம்முடைய முக அழகை பாதிக்கக்கூடிய சில விஷயங்களில் நாம் கண்ணும் கருத்துமாக ஆரம்பத்திலேயே இருந்து விட்டோம் என்றால் வயதான பிறகும் நம்முடைய முக அழகை நம்மால் பாதுகாக்க முடியும். அப்படி ஆரம்பத்திலேயே முகத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று தான் பருக்களும் கரும்புள்ளிகளும். இந்த பருக்களையும் கரும்புள்ளிகளையும் நீக்குவதற்கு வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய ஒரு அழகு குறிப்பை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய வெந்தயத்தில் அதிக அளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மருத்துவ குணம் மிகுந்த இந்த வெந்தயத்தை நம்முடைய தலைமுடிக்கு நாம் பயன்படுத்தி இருப்போம். இதே வெந்தயத்தை நம்முடைய முகத்திற்கு எந்த முறையில் பயன்படுத்தினால் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய பருக்களும் கரும்புள்ளிகளும் நீங்கும் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது பருக்கள் தான். பருக்கள் வரும் காலங்களில் அந்த பருக்களை கிள்ளுவதோ அல்லது அதை சரி செய்ய வேண்டும் என்று ஏதாவது முயற்சிகள் செய்தோம் என்றால் அந்த பருக்கள் இருந்த இடத்தில் கரும்புள்ளிகள் வந்துவிடும். இந்த கரும்புள்ளிகள் வந்து விட்டாலே முகத்தில் இருக்க கூடிய அழகு என்பது முற்றிலுமாக நீங்கிவிடும்.

கரும்புள்ளிகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் முதலில் நாம் பருக்களின் மீது கைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். பருக்கள் வராமல் இருப்பதற்கும் அப்படி பருக்கள் வந்த பிறகு அதனால் கரும்புள்ளிகள் ஏற்பட்டு இருந்தாலும் இந்த எளிமையான வெந்தைய அழகு குறிப்பை நாம் முயற்சி செய்து பார்க்கலாம். குறைந்தது ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆவது இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி ஊற வைத்து விட வேண்டும்.

- Advertisement -

ஊறிய இந்த வெந்தயத்தில் நான்கு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். வெந்தயம் நன்றாக வெந்த பிறகு இந்த தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது யாருக்கு கரும்புள்ளி பிரச்சனை இருக்கிறதோ அவர்கள் இந்த வெந்தய நீரில் ஆவி பிடிக்க வேண்டும். இவ்வாறு ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய முகத்துவாரங்கள் திறந்து அதில் இருக்கக்கூடிய அழுக்குகளும் கரும்புள்ளிகளும் வெளியேறும்.

பிறகு ஒரு துண்டை வைத்து முகத்தை நன்றாக துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நாம் வேக வைத்திருக்கும் இந்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை நம்முடைய முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் அந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி முகத்தை கழுவிய பிறகு எதையும் பயன்படுத்தி முகத்தை துடைக்காமல் இயற்கையிலேயே முகம் உளறும்படி விட்டுவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகப்பருக்கள் வருவது தடுப்பதோடு மட்டுமல்லாமல் முகப்பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகளையும் வெந்தயம் நீக்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: இயற்கையான ஹேர் டை தயாரிக்கும் முறை

அனைவரின் சமையலறையிலும் இருக்கக்கூடிய வெந்தயம் முகப்பரு பிரச்சனைக்கு முடிவு கட்டும் என்பதை உணர்ந்து இந்த முறையில் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்கி அழகான தோற்றத்தை பெறுவோம்.

- Advertisement -