- Advertisement -
- Advertisement -

நம்முடைய இயற்கையான நிறம் சூரியனின் ஒளி கதிர்களால் கருப்பாக நாட்பட நாட்பட மாற்றம் அடைந்து விடுகிறது. இந்தக் கருமை விடாப்பிடியாக மாறி, நம்முடைய தோலின் நிறத்தையே கருப்பாக மாற்றி விடுகிறது. கருப்பாக இருக்கும் நம்முடைய இந்த தோலின் நிறத்தை, இயற்கை நிறத்திற்கு மாற்றுவதற்கு தக்காளியில் இருக்கும் விட்டமின் சி விரைவான பலன் தரக்கூடியதாக இருக்கிறது. ஒரே ஒரு தக்காளியில் எப்படி நம்ம முகத்தை வெள்ளையாக மாற்றுவது? என்னும் ரகசியத்தை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி, சருமத்தின் மேல் உள்ள excess எண்ணெய், மாசுகள், மங்கலான நிறம் ஆகியவற்றை குறைக்கிறது. Vitamin C நிறைந்திருப்பதால் நிறத்தை இலகுவாக்கும். அதிகப்படியான எண்ணெய்களை வெளியேற்றி, முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எண்ணெய் பசையுள்ள சருமத்தினருக்கு இது நல்ல மருந்தாக செயல்படும். விட்டமின் சி இருப்பதால் சருமத்தில் எரிச்சல், தடிப்பு போன்ற தொந்தரவுகள் வராது.

- Advertisement -

தேன் ஒரு இயற்கை ஆன்டி-பாக்டீரியல் மற்றும் மாய்ச்சுரைசர். சருமத்தில் இருக்கும் நுண்ணிய துளைகளுக்குள் சென்று வேருடன் கிருமிகளை அழிக்கக்கூடியது. வறண்ட சருமத்தில் செயல்புரிந்து நன்கு ஈரப்பதமாக எப்போதும் வைத்திருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலம் வரக்கூடிய சரும தொந்தரவுகளை அகற்றும்.

ஒரு மீடியம் சைஸ் தக்காளியை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து, அதை இரண்டாக வெட்டி மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு நைசாக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த தக்காளி பேஸ்ட்டுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் கலந்து வையுங்கள். பிறகு இந்த பேஸ்ட்டை சருமத்தில் கருமை படர்ந்திருக்கும் இடங்களில் மட்டும் நன்கு தடவி காய விடுங்கள். உலர்ந்து காய்ந்ததும் ஒரு டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தி துடைத்து எடுத்தாலே, உங்களுக்கு எந்த அளவிற்கு கருமை வெளியில் வருகிறது என்பதை பார்க்க முடியும்.

- Advertisement -

சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள், மாசுகள், தூசுகளை இந்த பேக் எளிதாக அகற்றி கொடுக்கும். இதனால் விடாப்பிடியான சரும கறைகளும் நீங்கி, சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். முகம் மட்டுமல்லாமல் கைகளில் இருக்கக்கூடிய கருமை, கால் கருமை, பாதத்தில் உண்டாகக்கூடிய கருமை, வெளியில் தெரியாத உள் உறுப்புகளுக்குள் இருக்கக்கூடிய கருமைகளை கூட இது எளிதாக விரட்டி அடிக்கும், ஆனால் ஒரே நேரத்தில் இது நடக்காது. வாரம் 2 முறை பயன்படுத்தலாம். குறைந்தது 4 வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது தான் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

இதையும் படிக்கலாமே:
18-05-2025 திருவோண நட்சத்திர வழிபாடு

அடிக்கடி தக்காளியை ஜூஸ் போட்டு குடியுங்கள். இதில் இருக்கும் வைட்டமின் சி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளும். தினமும் தக்காளியை பயன்படுத்தாமல் சமையல் செய்வதில்லை! சமையல் செய்யும் பொழுதே ஒரு தக்காளியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நேரம் கிடைக்கும் பொழுது தேன் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து, பின்பு காய வைத்து கழுவிக் கொள்ளலாம். நாலு வாரம் ட்ரை பண்ணி பாருங்க, பழைய நிறத்திற்கும், புது நிறத்திற்கும் நிறையவே வித்தியாசத்தை பார்க்க முடியும். அந்த அளவிற்கு நல்ல ரிசல்ட் தரக்கூடிய இந்த ஃபேஸ் பேக், நீங்களும் ட்ரை பண்ணி பயனடையுங்கள்.

- Advertisement -