- Advertisement -
சமையல் குறிப்புகள்

காரைக்கால் ஸ்பெஷல் கட்டிச்சோறு செய்முறை

எங்காவது ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்புகிறோம் அன்றைய பொழுது நாம் ஏதாவது மதிய உணவிற்காக தயார் செய்ய வேண்டும் என்னும் பட்சத்தில் அந்த நேரத்தில் காய்கறிகள் எதுவுமே இருக்காது. அதுவும் குறிப்பாக தக்காளி கூட இல்லாத ஒரு சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்தவித காய்கறிகளையும் சேர்க்காமல் மிகவும் சுவையாக இருக்கக்கூடிய காரைக்காலில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகையான கட்டிச்சோரை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் தெரிந்து கொள்வோம்.

இந்த கட்டிச்சோரை செய்வதற்கு நமக்கு தக்காளி கூட தேவை இல்லை. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு அப்பளம், வடகம், சிப்ஸ், முட்டை, தயிர் பச்சடி என்று எதை வேண்டுமானாலும் நாம் வைத்துக் கொள்ளலாம். மிகவும் எளிதில் செய்யக்கூடிய இந்த கட்டிச்சோறு சுவையில் மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • அரிசி – 2 டம்ளர்
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – ஒரு டீஸ்பூன்
  • உளுந்து – 1/2 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – ஒன்று
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • பூண்டு – 15 பல்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • காய்ந்த மிளகாய் – 3
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 3/4 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • புளி – எலுமிச்சை அளவு
  • தேங்காய் பால் – ஒரு டம்ளர்

செய்முறை

முதலில் அரிசியை ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதை போல் புளியையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு இவற்றை சேர்க்க வேண்டும்.

கடுகு வெடித்து கடலைப்பருப்பு சிவந்ததும் அதில் பூண்டு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பூண்டு லேசாக வதங்கியதும் இதில் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை முழுதாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து அதன் பச்சை வடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதில் அரை டம்ளர் அளவிற்கு புளி கரைசல் தண்ணீரை ஊற்ற வேண்டும். இது லேசாக சூடானதும் தேங்காய் பால் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இதில் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து 4 1/2 டம்ளர் அளவிற்கு தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விட வேண்டும். மிதமான தீயில் மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து ஒரு முறை கிளறி விட்டால் போதும். மிகவும் சுவையான காய்கறிகள் இல்லாத கட்டிச்சோறு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே கத்திரிக்காய் பொடி கறி செய்முறை

ஆத்திர அவசரம் என்னும் பட்சத்தில் எந்த காய்கறிகளும் இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை கடையில் இருந்து வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த முறையில் கட்டிச்சோறு செய்து சாப்பிடலாம்.

- Advertisement -