- Advertisement -
சமையல் குறிப்புகள்

சுவையான, சுலபமான, ஆரோக்கியமான இந்த கீரை போண்டா செய்ய வெறும் 10 நிமிடம் போதும். டீ கடை போண்டா பிரியர்களுக்கு இந்த ரெசிபி!

- Advertisement -

பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரை சாப்பிடுவதற்கு கஷ்டப்படுவார்கள். ஆனால் கீரையை, போண்டாவில் சேர்த்து சுட்டு கொடுத்தோமேயானால் யம்மி யம்மி போண்டாவை கீரையோடு சேர்த்து விருப்பமாக சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட. நிறைய கடைகளில் இப்படிப்பட்ட போட்டோக்கள் கிடைக்கும். அந்த டீ கடை போண்டா சுவையில் நம்முடைய வீட்டிலும் கடலை மாவை வைத்து கீரை சேர்த்து போண்டாவை எப்படி. செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

இந்த போண்டா செய்ய தேவையான பொருட்கள். கடலை மாவு – 1 கப், பச்சரிசி மாவு – 1/4 கப், சோம்பு – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது – 1 கைப்பிடி அளவு, பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது – 1, பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, அரைக்கீரை சுத்தம் செய்து கொஞ்சம் பொடியாக நறுக்கியது – 2 கைப்பிடி அளவு. (இதில் கடலை மாவு 250 கிராம் அளவு அளந்து எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். எந்த கப்பில் கடலைமாவை அளக்கிறீர்களோ அதே கப்பில் – 1/4 கப் அளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள் சரியாக இருக்கும்.)

- Advertisement -

அடுப்பில் போண்டா சுடுவதற்கு ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுட வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவையும் அரிசி மாவையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு விடுங்கள். அதன் பின்பு சோம்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒருமுறை வெங்காயத்துடன் மாவு ஒட்டும் படி உங்கள் விரல்களால் நன்றாக கலந்து கொடுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய் சூடானதும் அந்த எண்ணிலிருந்து 1/2 குழிக்கரண்டி அளவு எடுத்து இந்த மாவில் ஊற்றி நன்றாக பிசைந்து கொடுக்க வேண்டும். அடுத்தபடியாகத்தான் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை கொத்தமல்லித் தழையையும், பச்சை மிளகாயையும், கீரையையும், மாவோடு சேர்த்து நன்றாக பிசைந்து கொடுத்து இறுதியாக தண்ணீர் தெளித்து தெளித்து போண்டா மாவு பதத்திற்கு மாவை பிசைய வேண்டும். மாவை எடுத்து உருண்டை செய்து எண்ணெயில் போடும் அளவிற்கு மாவு கொஞ்சம் கெட்டி பதம் ஆகத்தான் இருக்க வேண்டும். அதேசமயம் சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவு ரொம்பவும் கெட்டியாக இருக்கக் கூடாது. போண்டா உள்ளே வேகாது.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு அதன் பின்பு சிறு சிறு உருண்டைகளாக மாவை உருண்டை பிடித்து எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், டீக்கடை கீரை போண்டா தயார். போண்டா சைசை கொஞ்சம் சின்னதாகவே விட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் உள்ளே கடலை மாவு நன்றாக வெந்திருக்கும்.

பின்குறிப்பு: மேலே சொன்ன படி குறிப்புகளை பின்பற்றி, போண்டா மாவு பிசையும்போது எந்த பொருளுக்கு பின்பு, எந்த பொருட்களை சேர்க்க வேண்டும் என்று சரியாக சேர்த்து மாவை பிசைந்தால் நிச்சயம் போண்டா பக்குவம் மாறாது. கீரை வகைகளில் மட்டும் உங்களுக்கு எந்த கீரை கிடைத்தாலும், இந்த போண்டாவில் சேர்த்துக்கொள்ளலாம். அரைக்கீரை மட்டுமல்லாமல் சிறுகீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை, சேர்த்தும் போண்டா செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் இன்னைக்கு ஈவினிங் டீ குடிக்கும்போது இந்த போண்டா செஞ்சு பாருங்க.

- Advertisement -