- Advertisement -
- Advertisement -

கடவுளுக்கு ஒரு படி மேலான வழிப்பாடாக இந்த சித்தர்கள் வழிபாடானது நமக்கு சொல்லப்பட்டுள்ளது. கடவுள் வழிபாட்டை காட்டிலும் சித்தர்கள் வழிபாடு நமக்கு சீக்கிரம் பலன் தரும் என்பது சில ஞானிகளுடைய கருத்தாக இருக்கிறது. எது எப்படியாக இருந்தாலும் சித்தர்களை, அந்த சிவபெருமானின் மறுரூபமாகத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சித்தர்களும் கடவுளும் வேறு வேறு இல்லை என்பதே ஆன்மீகத்தில் நிலவி வரும் ஒரு நம்பிக்கை.

அந்த வகையில் இன்று ஒரு சித்தரை பற்றிய ஒரு வரி மந்திரத்தை பார்க்க போகின்றோம். உங்களுடைய எளிமையான கோரிக்கைகளை இந்த சித்தரிடம் சொல்லுங்கள். இரண்டே நாட்களில் அந்த கோரிக்கை நிறைவேறும் என்பதும், இரண்டே நாட்களில் நீங்கள் அந்த சித்தரை உணரக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த சித்தரின் பெயர் என்ன. இந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும். எந்த நேரத்தில் உச்சரிக்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த சுவாரசியமான இந்த பதிவினை படிக்க தவறவிடாதீர்கள் இது உங்களுக்கு கிடைத்த பொக்கிஷமான பதிவு.

- Advertisement -

சித்தர் வழிபாடு

கேளக்கியர் சித்தர். நிறைய சோசியல் மீடியாவில் கூட இந்த பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இணையதளத்தில் இந்த பெயரை தேடி பார்த்தால் கிடைக்காது. கேளக்கியர் என்ற பெயர் கூகுளிலும் வரவில்லை. பிறகு எப்படி இந்த சித்தர் நமக்கு நன்மை செய்வார். அந்த குழப்பத்திற்கு எல்லாம் போகாதீங்க. தினமும் காலை 4:45 மணி முதல் 5:00 மணி வரை நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

காலை 4:30 மணிக்கு எழுந்து முகம் கழுவி ஒரு இடத்தில் அமர்ந்து நெய் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ!’ என்ற மந்திரத்தை நம்பிக்கையோடு சொல்லுங்கள். தினமும் 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி உங்களுடைய ஒரே ஒரு வேண்டுதலை வைக்க வேண்டும். மிக மிக எளிமையான சுலபமான வேண்டுதலை முதலில் வையுங்கள்.

- Advertisement -

2 நாட்களுக்குள் அந்த வேண்டுதல் உங்களுக்கு பலிக்கும். இந்த மந்திரத்தை உச்சரித்ததன் பயனாக இந்த சித்தரை தரிசனம் செய்யக் கூடிய பாக்கியம் கூட நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எப்படி தெரியுமா. சித்தர்கள் என்றால் சுருட்டு வாசனை, சந்தன வாசனை, விபூதி வாசனை வரும் என்பது பல பேருடைய நம்பிக்கை. இதே போல தான் நீங்கள் இந்த சித்தர் பெயரை உச்சரிக்கும் போது, இப்படிப்பட்ட தெய்வீக நறுமணங்கள் இவர் வருவதை உங்களுக்கு உணர்த்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இவ்வளவு எளிமையாக நாம் நினைத்ததை இந்த பிரபஞ்சத்தில் அடைய முடியுமா என சில பேருக்கு சந்தேகம் வரும். பல பேர் இந்த சித்தரின் பெயரை உச்சரித்து பல கஷ்டங்கள் உடனடியாக தீர்ந்ததாக சொல்லி இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் சார்ந்த கேளக்கியர் சித்தர் மந்திரம் உங்களுக்கும் பயனுள்ளபடி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவின் மூலம் பகிரப்பட்டுள்ளது.

- Advertisement -

மேல் சொன்ன இந்த சித்தரை உண்மையான பக்தியோடு அழைத்து தான் பார்ப்போமே. நமக்கான வரத்தை கொடுக்காமல் போய்விடுவார். இந்த விஷயம் உண்மையா என்பதை நீங்கள் சோதித்துப் பாருங்கள். ஆனால் நம்பிக்கையோடு வழிபாட்டை செய்யுங்கள். 2 நாட்களில் நீங்கள் நினைத்த நல்லது நடந்து விட்டால், அடுத்து நம்முடைய வாழ்க்கைக்கு, லட்சியத்தை ஜெய்ப்பதற்கு என்னவெல்லாம் தேவையோ நம்பிக்கையோடு கேட்டு பெற்றுக் கொள்ளலாம் அல்லவா.

இதையும் படிக்கலாமே: தடையில்லா பண வரவை பெற பரிகாரம்

பிரபல ஜோதிடர் ஒருவர் ஒரு நேர்காணலில் மேல் சொன்ன விஷயங்களை சொல்லி உள்ளார்கள். அதைத்தான் இன்று உங்களோடு பகிர்ந்து கொண்டோம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை பின் தொடர்ந்து பலன் பெறலாம்.

- Advertisement -