
மனதில் ஒரு கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு தான் அனாவசிய செலவு அதிகமாக இருக்கும். இன்றைக்கான செலவை, இந்த ரூபாய்க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு வரைமுறைக்கு நீங்கள் வந்தால் மட்டும் தான் செலவுகளை கட்டுப்படுத்த முடியும். சேமிப்பை அதிகப்படுத்த முடியும். கட்டுப்பாட்டை இழந்து நாளை வரக்கூடிய பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல், இன்று வந்த வருமானத்தை, இன்றே செலவு செய்பவர்களுக்கு மிஞ்சியது கடன் மட்டும் தான்.
ஆகவே உங்களுடைய மனதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். லட்சுமிதேவி நிலையாக உங்களிடத்தில் தங்க வேண்டும், நீங்களும் குபேரராக வாழ வேண்டும் என்றால், செய்ய வேண்டிய எளிமையான ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டையும் உச்சரிக்க வேண்டிய மந்திரத்தையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுடைய வீட்டில் ஒரு லட்சுமி குபேர திருவுருவப்படத்தை வாங்கி வடக்கு திசை நோக்கி மாட்டி வையுங்கள். வீட்டில் செலவு குறையும். தினமும் அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் நாமும் கையில் பணத்தை சேமிக்க வேண்டும், நாமும் குபேரராக வேண்டும், என்ற எண்ணம் வர வேண்டும். தினமும் குளித்து முடித்துவிட்டு வந்து அந்த படத்தை பார்த்து ‘ஓம் நமோ குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். அடுத்தபடியாக ‘ஓம் நமோ குபேர லட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.
ஒரு நாள் குபேர மந்திரம், ஒரு நாள் குபேர லட்சுமி மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. இன்று ஏதோ ஒரு பொருளை வாங்க போறீங்க. அந்த பொருள் உங்களுக்கு பயன்படுமா என்று சிந்தியுங்கள். அந்த பொருள் பயன்படாது. ஆனால் வாங்க வேண்டும் என்ற ஆசையை உங்கள் மனது தூண்டுகிறது. உடனே உங்களுடைய மனதிற்குள் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ‘ஓம் நமோ குபேராய நமஹ, ஓம் நமோ குபேராய நமஹ’ அப்படி சொல்லிக் கொண்டே இருந்தால் வீண் செலவை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் வந்துவிடும். காசு செலவாகாது. சேமிப்பில் போய் தங்கும்.
எதிர்காலத்தில் நீங்கள் கடனாளியாகாமல் இருப்பீர்கள். சில பேர் இதெல்லாம் முட்டாள்தனம் என்று நினைக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் செலவை குறைக்க வேண்டும் என்று நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். மூன்றே மாதத்தில் நீங்கள் நினைத்து பார்க்காத அளவு பணம் சேரும். நினைத்து பார்க்காத அளவு செலவை குறைத்து இருப்பீர்கள்.
இதையும் படிக்கலாமே: சிவபெருமான் வசிய விபூதி தயார் செய்யும் முறை
நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள். அதுதான் மந்திரத்திற்கு இருக்கும் மகிமை. மனக்கட்டுப்பாட்டை உங்களுக்கு தானாக கொடுத்து விடும். நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை முயற்சி செய்து பார்க்கலாம், நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவினை நிறைவு செய்து கொள்வோம்.