
இன்று பெரும்பாலும் பல குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால் வீட்டிற்கு வேலை செய்ய ஆட்களை நியமிக்கின்றனர். வேலை செய்யும் நபர் உங்களுக்காக எவ்வளவு வேலை செய்தாலும், நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை செய்ய மறுக்கக்கூடாது என்று சாத்திரங்கள் கூறுகிறது. இப்படி குடும்பத்தலைவி இந்த வேலைகளை செய்யாவிட்டால், லட்சுமி கடாட்சம் குறையுமாம். வாங்க, குடும்பத்தலைவி செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி ஆன்மீகம் சார்ந்த இப்பதிவில் பகிர்ந்து கொள்வோம்.
வீட்டில் வேலைக்கு எவ்வளவு ஆட்கள் இருந்தாலும், எந்தெந்த வேலைகளை அவருக்கு செய்ய வேண்டும் என்று நீங்கள் பிரித்துக் கொடுத்து வைத்திருந்தாலும், ஒரு சில வேலைகளை மட்டும் நீங்களாகவே உங்களுடைய கைகளில் செய்தால் தான் சாஸ்திர ரீதியாக நிறைய நன்மைகள் கிடைக்கும். அதில் முதலாவதாக இருப்பது, காலையில் எழுந்ததுமே வாசல் தெளிக்க வேண்டும். வாசலை கூட்டி கோலம் போட்டு கொடுத்தாலும், தண்ணீர் தெளிப்பது உங்களுடைய கைகளில் செய்யுங்கள்.
வேலைக்கு நியமிக்கப்பட்ட பெண், வாசலை கூட்டி கொடுத்து விட்ட பின்பு, தண்ணீரை தெளிக்க உங்களை அழைக்க சொல்லுங்கள். குடும்பத் தலைவி வாசலில் தண்ணீரை தெளித்தால் தான், மகாலட்சுமி அங்கு மனம் நிறைந்து காலடி எடுத்து வைக்கிறாள். ஆன்மீக ரீதியாக இந்த சிறு சிறு விஷயங்களை மட்டும் கடைப்பிடிக்க மறுக்க வேண்டாமே! எல்லாவற்றையும் அவர்கள் செய்தால், நீங்கள் எதற்கு என்றாகிவிடும்.
பூஜை அறையை சுத்தம் செய்யும் பொழுது, கண்டிப்பாக உங்களுடைய பங்களிப்பு அதில் இருக்க வேண்டும். எல்லா வேலைகளையும் மற்றொரு பெண்மணி செய்துவிட்ட பின்பு, நீங்கள் சும்மா விளக்கேற்றினால் மட்டும் போதாது! உதாரணத்திற்கு பூஜை சாமான்களை கழுவி கொடுப்பது நீங்களாக இருக்க வேண்டும். இப்படி முடியாவிட்டாலும், பூஜைக்கு படங்களை தயார் செய்வது, மஞ்சள் குங்குமம் வைப்பது, பூக்களை வைப்பது போன்ற விஷயங்களை ஆவது நீங்கள் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் பூஜைக்கு தயார் செய்யப்பட்ட நைவேத்தியம், உங்களால் கடவுளுக்கு படைக்கப்பட வேண்டும்.
அதாவது வேலைக்கு பணியமர்த்திய ஆள் நைவேத்திய பிரசாதத்தை தயார் செய்தால் பரவாயில்லை, ஆனால் அதை நீங்கள் தான் வாழை இலையில் அல்லது பிரத்தியேக பூஜை பாத்திரத்தில் வைத்து சுத்தபத்தமாக கொண்டு போய் பூஜை அறையில் வைக்க வேண்டும். விளக்கு ஏற்றி பூஜை செய்து தூப, தீபம் காண்பிப்பது, ஆரத்தி காண்பிப்பது அனைத்தையும் நீங்கள் தான் செய்ய வேண்டும். உங்களுடைய மனதால், சரீரத்தால் சிறு சிறு மந்திர ஜெபங்களை உச்சரித்து, பூஜையை முழுமை பெற செய்தால் தான், வீட்டில் மகாலட்சுமி நிறைந்து இருப்பாள் என்பது ஐதீகம்.
இதையும் படிக்கலாமே:
இன்று 14-7-2025 சங்கடஹர சதுர்த்தி
அரிசியை படியில் அளந்து எடுத்து போடுவது, குடும்பத் தலைவி செய்ய வேண்டும். அரிசி படியில் அன்னபூரணி நிறைந்து இருக்கிறாள். அவளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், உங்களுடைய குடும்பம் வறுமை இல்லாமல், செழிப்பாக இருக்கவும், நீங்கள் படியில் அரிசியை அளந்து போடுங்கள். மேலும் உணவு பரிமாறுவது உங்களுடைய கைகளில் தான் செய்ய வேண்டும். கணவனுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ, வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கோ, குடும்பத்தலைவி உணவு பரிமாறுவது சுபீட்சத்தை ஏற்படுத்தும்.