- Advertisement -

குலதெய்வத்தின் அருளை பெறுபவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அப்படி குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாட்டை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். பலருக்கு குலதெய்வத்தின் அருள் கிடைத்தாலும் சிலருக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். இதற்கு குலதெய்வ சாபம், குலதெய்வ கட்டு என்று பல காரணங்கள் இருக்கின்றன. இந்த அனைத்து காரணங்களையும் சரி செய்துவிட்டு குலதெய்வம் வீட்டிற்குள் வரவும் மகாலட்சுமியின் அருளைப் பெறவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

என்னதான் முறையாக குலதெய்வ வழிபாட்டை நாம் செய்தாலும் குலதெய்வ சாபம் அல்லது கட்டு இருக்கும் பட்சத்தில் குலதெய்வம் நம்முடைய வீட்டிற்குள் வராது. அப்படி குலதெய்வம் நம்முடைய வீட்டிற்கு வரவில்லை என்றால் எதிர்மறை ஆற்றல்களால் நமக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். இவை அனைத்தையும் நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். இதற்கு ஒரு மண் கலையம் வேண்டும். ஒரு லிட்டர் அளவு கொள்ளளவு இருக்கக்கூடிய மண் கலையம் இருந்தால் போதும். இந்த மண் கலையத்திற்குள் காதோலை கருகமணி – 2, பச்சரிசி – ஒரு கைப்பிடி அளவு, நவதானியம் – 100 கிராம், விரலி மஞ்சள் – 2, கற்கண்டு – ஒரு கைப்பிடி அளவு, கல் உப்பு – ஒரு கைப்பிடி அளவு, நவரத்தின செட் – ஒன்று, பஞ்சலோக செட் – ஒன்று, சங்கு – ஒன்று, பச்சை கற்பூரம் மூன்று துண்டு இவை அனைத்தையும் போட வேண்டும்.

பிறகு குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். “ஓம் ஸ்ரீம் குலதெய்வம் நமஹா தன தானிய லட்சுமியை வசி வசி நமஹா”. இதில் குலதெய்வம் என்று வரும் இடத்தில் குலதெய்வத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள் குலதெய்வம் என்றே கூறலாம். இப்படி தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.

- Advertisement -

முதல் வாரம் நாம் இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு அந்த மண் கலையத்திற்குரிய மூடியை வைத்து மூடிவிட வேண்டும். மறுபடியும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இதை திறந்து வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி 11 வாரங்கள் செய்து முடித்த பிறகு இதில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களை பொடி செய்து பசு மாட்டிற்கோ அல்லது எறும்புகள் இருக்கும் இடத்திலோ போட்டு விட வேண்டும்.

மண் கலயத்தை தவிர்த்து மீதம் இருக்கும் காதோலை கருகமணி, நவரத்தின செட்டு, பஞ்சலோக செட்டு, சங்கு இவை அனைத்தையும் கோவில் உண்டியலில் சேர்த்து விடலாம். இப்படி நாம் செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்து குலதெய்வம் நம்முடைய வீட்டிற்குள் வரும். குலதெய்வத்தோடு மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

இந்த ஒரு பரிகாரத்தை நாம் முழுமனதோடு குலதெய்வத்தை நம்பி செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் குலதெய்வத்தின் அருளை பெறுவதோடு மட்டுமல்லாமல் குலதெய்வம் நம்முடைய வீட்டிற்குள் வந்து நிரந்தர வாசம் செய்யும்.

- Advertisement -