- Advertisement -

லட்சுமி கடாட்சம் பெருக தீர்த்தம்

- Advertisement -

வீட்டிலும், அலுவலகங்களிலும், தொழில் செய்யும் இடங்களிலும் லட்சுமி கடாட்சம் எப்பொழுதும் அதிகரித்து காணப்பட வேண்டும். தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும், செய்யும் வேலையில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது. இந்த தீபாவளியில் இருந்து லட்சுமி கடாட்சம் பெருக இந்த புனித தீர்த்தத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள், செல்வம் அட்சய பாத்திரம் போல சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த புனித தீர்த்தம் எப்படி தயாரிப்பது? என்பது போன்ற தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை மற்றும் குபேரனுக்கு உகந்த வியாழன் கிழமை இந்த இரண்டு கிழமைகளிலும் இந்த புனித தீர்த்தத்தை தயார் செய்து பயன்படுத்த வேண்டும். வியாழன் கிழமை பூஜை செய்யும் பொழுது மாலை ஐந்து மணியிலிருந்து எட்டு மணி வரை செய்யலாம். வெள்ளிக்கிழமையில் பூஜை செய்பவர்கள் ஐந்தரை மணியில் இருந்து ஏழு மணி வரை செய்யலாம்.

- Advertisement -

செல்வம் பெருக தீர்த்தம் செய்யும் முறை:

வியாழன் கிழமையில் குபேரனுக்கு முன்பு ஒரு வெள்ளி, பித்தளை, செம்பு அல்லது மண் கலசம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கலசத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் மஞ்சள் பொடியை தூவிக் கொள்ளுங்கள். கொஞ்சம் பச்சை கற்பூரத்தை சேர்த்து, ரெண்டு ஏலக்காயை போட்டு, நான்கைந்து துளசி இலைகளை போட்டு கலந்து வையுங்கள். வெள்ளிக்கிழமை செய்பவர்கள் மகாலட்சுமி படத்திற்கு முன்பு இது போல கலசம் ஒன்றை தயார் செய்து வைக்க வேண்டும்.

கலசம் தயார் செய்த பின்பு நெய் தீபம் ஏற்றி வைத்து வடக்கு முகம் நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். வடக்கு திசையில் சுவாமி படத்திற்கு முன்பு உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வையுங்கள். பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தபடி பணத்தின் மீது இந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். இதை நீங்கள் வீட்டிலும் செய்யலாம். கடை, அலுவலகம், தொழில் செய்யும் இடம் போன்றவற்றிலும் செய்யலாம்.

- Advertisement -

மஹாலக்ஷ்மி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மியை நமஹ!!!

குபேர மந்திரம்:

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶ்ரீம் க்லீம் வித்தேஷ்வராய நமஹ!!!

இதையும் படிக்கலாமே:
எதிர்பாராமல் ஏற்படும் விபத்தில் இருந்து தப்பிக்க மந்திரம்

இந்த தீர்த்தத்தை பணத்தின் மீது தெளிக்கும் பொழுது தொழில் வசியம், பண வசியம், வியாபார வசியம் என்று எல்லா வசியமும் உண்டாகி லட்சுமி கடாட்சம் பெருக துவங்கும். தொழில் செய்பவர்கள் கல்லாப்பெட்டியில் இந்த தீர்த்தத்தை தெளித்து மேற்கூறிய மந்திரத்தை சொல்ல வேண்டும். பணம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்த தீர்த்தத்தை தெளித்து, மந்திரம் சொல்லி உச்சரிக்க வேண்டும். பீரோ, லாக்கர், மணிபர்ஸ், கல்லாப்பெட்டி என்று எல்லா இடங்களிலும் பணத்தை வைத்து அதில் இந்த தீர்த்தத்தை தெளித்து வாருங்கள். தொடர்ந்து எல்லா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி மற்றும் குபேரனுக்கு கலச தீர்த்தம் தயார் செய்து தெளித்து வருவதன் மூலம் நலிந்து கொண்டிருக்கும் உங்களுடைய பொருளாதார நிலை உயர்வடையும். குடும்பத்தில் லக்ஷ்மி கடாட்சம் அதிகரித்து பணவரத்தும், செல்வமும் கூடும். வெள்ளி மற்றும் வியாழன் கிழமையில் நீங்கள் பூஜை செய்யும் இந்த நேரத்தில் அமங்கலமான வார்த்தைகளையும், எதிர்மறையான வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது. முழுமையாக இறை பக்தியுடன் இதைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு வாழ்க்கையில் ஒருபோதும் வறுமை என்பது ஏற்படுவதில்லை.

- Advertisement -