- Advertisement -

அன்னை லலிதாம்பிகையின் ஆயிரம் நாமங்கள் சேர்ந்த பதிகம் தான் லலிதா சகஸ்ரநாமம். இந்தப் பாடலை இன்றைய அவசர அவசரமான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு ஒருமுறை படிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுமட்டுமல்லாமல் இந்த பாடல்வரிகளை உச்சரிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும்.

எல்லோராலும் அவ்வளவு சுலபமாக லலிதா சகஸ்ரநாமத்தை படித்து விட முடியாது. ஆனால் அதற்கு பதில் மகா பெரியவா அவர்கள் லலிதா சகஸ்ர நாமத்தை சுருக்கமாக 7 வரிகளில் நமக்கு கொடுத்துள்ளார். தினமும் 11 முறை இந்த மந்திரத்தை சொன்னீர்கள் என்றால், முழுமையாக லலிதா சகஸ்ரநாமம் படித்த புண்ணியம் உங்களை வந்து சேரும். அந்த வரிகள் என்ன. அதை எப்படி படிக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

தினமும் காலையிலும் மாலையிலும் 11 முறை இந்த நாமத்தை உச்சரிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து இந்த வரிகளை பார்த்து படிக்கலாம். மனதில் ஒரு கோரிக்கையை வைத்துக் கொள்ளுங்கள். அதை நிறைவேற வேண்டும் என்று அந்த சக்திதேவியிடம் பிரார்த்தனை வையுங்கள். லலிதாம்பிகை உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றி வைப்பாள்.

பின் சொல்லக்கூடிய இந்த மந்திர வரிகளை முழுமையாக படிக்கவும். ஏழு வரிகளையும் மொத்தமாக ஒரு முறை படித்துவிட்டு 1 என்ற கணக்கை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் 7 வரிகளையும் படிக்க வேண்டும். இதே போல 11 முறை படியுங்கள். தினமும் இந்த வரிகளை நீங்கள் படிக்கும் போது மந்திரம் உங்களுக்கு சித்தியாகும்.

- Advertisement -

மொத்தமாக ஒரு லட்சம் முறை இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கும் போது, உங்கள் மனதில் நினைத்த கோரிக்கையை நிச்சயமாக அந்த லலிதாம்பிகை நிறைவேற்றி வைப்பாள் என்பது தான் நம்பிக்கை. லலிதா சகஸ்ரநாமம் சுருக்கமான வரிகள் இதோ உங்களுக்காக.

லலிதா சகஸ்ரநாமம் சுருக்கமாக

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!

- Advertisement -

ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!

ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க செம்பருத்தி இலை பூஜை

தவிர ஒரு நாளைக்கு உங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் இந்த மந்திரத்தை எடுத்து படிக்கலாம். தவறு கிடையாது. அதேபோல ஒரு அம்மன் கோவிலுக்கு செல்கிறீர்கள். 10 பெண்கள் ஒன்றாக சேர்ந்து இந்த பாடலை அம்பாளுக்கு முன்பு பாடினால் இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும். நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்று இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ளதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -