- Advertisement -
சமையல் குறிப்புகள்

2 நிமிடத்தில் இப்படியும் செய்யலாம் லெமன் சட்னி! எலுமிச்சையில் சட்னியா? ஆச்சரியமா இருக்குல்ல! எப்படின்னு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

- Advertisement -

காலையில் எழுந்ததும் விதவிதமாக டிபன் வகைகள் செய்து வைத்தாலும் அதற்கு தொட்டுக் கொள்ள சட்னி செய்வது என்பது தான் மிகவும் பெரும்பாடாக இருக்கும். தினமும் என்னடா சட்னி செய்வது? என்று யோசித்து அழுத்து போனவர்களுக்கு லெமன் சட்னி ஒரு புதிய தேர்வாக இருக்கும். எலுமிச்சையை வைத்து எப்படி சட்னி செய்ய முடியும்? என்றெல்லாம் அதிகம் ஆராய வேண்டாம். லெமன் சட்னி செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

லெமன் சட்னி செய்த தேவையான பொருட்கள்:
பெரிய எலுமிச்சை – ஒன்று, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, கடுகு – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல்.

- Advertisement -

லெமன் சட்னி செய்முறை விளக்கம்:
நீங்கள் தேர்ந்தெடுக்கும் எலுமிச்சைபழம் பெரியதாக இருந்தால் ஒன்று மட்டும் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். மீடியம் சைஸ்சாக இருந்தால் இரண்டு எடுத்து பிழிந்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்து அதில் தேவையான உப்பு போட்டுக் கொள்ளுங்கள். இதற்கு காஷ்மீரி மிளகாய்த்தூள் தான் சரியான தேர்வாக இருக்கும். அதில் காரமும் அவ்வளவாக தெரியாது, நிறமும் அடர்ந்து சூப்பராக இருக்கும்.

அதில் எலுமிச்சை பழச் சாற்றையும், தேவையான அளவிற்கு கொஞ்சமாக தண்ணீரையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை அதிகம் சேர்த்து புளிப்பு அதிகமாகத் தெரிந்தால் அதில் கூடுதலாக மிளகாய் தூளை சேர்த்துக் கொள்வது நல்லது. பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னி செய்வதற்கு நல்லெண்ணெய் தவிர வேறு ஒரு எந்த எண்ணையையும் பயன்படுத்தக்கூடாது. நல்லெண்ணெய் தான் சுவையையும், காரத்தையும் கூட்டி கொடுக்கிறது. எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் நீங்கள் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து விடுங்கள்.

தாளித்தவற்றை சட்னியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். காரம் தேவைப்பட்டால் தேவைக்கு ஏற்ப கூடுதலாக சேர்த்து கலந்து கொள்ளலாம். எலுமிச்சை கலந்து உள்ளதால் இது இட்லி, தோசை சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள அசத்தலான சைட் டிஷ்ஷாக இருக்கும். சட்டென இரண்டு நிமிடத்தில் செய்யக் கூடிய இந்த எலுமிச்சை சட்னி அவசர நேரத்தில் மிகவும் உதவியாக இருக்கும். இட்லி பொடி இல்லாத சமயங்களில் கூட இது போல் சட்டென செய்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். காஷ்மீரி மிளகாய் தூளுக்கு பதிலாக சாதாரண மிளகாய்த்தூள் கட்டாயம் பயன்படுத்த கூடாது. அதே போல நல்லெண்ணெய், கடலெண்ணெய் தவிர வேறு ஒரு எந்த எண்ணையும் பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் நெய் சேர்த்துக் கொள்ளலாம். புதிய முறையில் இந்த எலுமிச்சை சட்னி நீங்களும் தயார் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -